azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 08 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 08 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

You know that the dream world is a fantastic world of nonsense, where fifty years are compressed into five minutes and where weird incidents and things are taken as actually present and experienced. But let Me tell you that from the stage of Realisation, even the waking stage, when you analyse the dreams and declare them as invalid, is equally without validity. Therefore, have a sense of values, rather a scale of values; give everything, everyone, its worth or their worth, not a whit more. Five sheaths encase the Atma and hide its splendour from revealing itself. Make all these pure and shining. The physical sheath (annamaya kosa) must be purified by good, clean, pure food; the vital sheath (pranamaya kosa) by calm, steady breathing and an equanimous temper; the mental sheath (manomaya kosa) by holy thoughts and emotions, untouched by attachment to senses or unaffected by joy or grief; the wisdom sheath (vijnanamaya kosa) by contemplation of the reality; and the bliss sheath (anandamaya kosa) by getting immersed in the ecstasy of God-realisation. (Divine Discourse, Feb 26, 1961)
THE PRINCIPLE OF LOVE IS PRESENT IN EVERYONE IN THE FORM OF ATMA.
THE ATMA IS INFINITE AND ETERNAL. - BABA
ஐம்பது ஆண்டுகள் ஐந்து நிமிடங்களாக சுருக்கப்பட்டு, வித்தியாசமான சம்பவங்களும் விஷயங்களும் உண்மையில் தற்காலத்தவை போலவும் அனுபவிக்கப் படுபவை போலவும் எடுத்துக் கொள்ளப்படுகின்ற கனவு உலகம், முட்டாள்தனத்தின் ஒரு அருமையான உலகம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால், ஆத்ம சாக்ஷாத்காரத்தின் நிலையிலிருந்து பார்த்தால்,கனவுகளை ஆராய்ந்து நீங்கள் அவற்றைச் செல்லாதவை என்று அறிவிக்கும் விழிப்பு நிலையும் கூட, அதே அளவு செல்லாதவையே என நான் உங்களுக்குக் கூறுவேன். எனவே, மதிப்புகளின் ஒரு அளவு கோலாக அல்லாது, மதிப்புகளின் ஒரு உணர்வோடு இருங்கள்; ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொருவருக்கும் அதன் அல்லது அவர்களின், ஒரு இம்மி அளவு கூட அதிகமாக இல்லாத மதிப்பை அளியுங்கள்.ஐந்து உறைகள் ஆத்மாவைச் சூழ்ந்து கொண்டு, அது தனது காந்தியை வெளியிட முடியாதவாறு மறைத்துக் கொண்டு இருக்கின்றன. இவை அனைத்தையும் பரிசுத்தமானவையாகவும், பிரகாசமானவையாகவும் ஆக்குங்கள். அன்னமய கோசத்தை நல்ல, அழுக்கற்ற, தூய உணவால் பரிசுத்தமாக்க வேண்டும்; ப்ராணமய கோசத்தை அமைதியான, நிலையான சுவாசம் மற்றும் ஒரு சமச்சீரான மனப்பாங்காலும்,மனோமய கோசத்தை, புலன்களின் பால் கொள்ளும் பற்றுதலினால் தீண்டப்படாத மற்றும் சுகம் அல்லது துக்கத்தினால் பாதிக்கப்படாத புனிதமான சிந்தனைகள் மற்றும் உணர்வுகளாலும், விஞ்ஞானமய கோசத்தை உண்மை நிலையின் மீதான தியானத்தினாலும், ஆனந்த மய கோசத்தை இறைவனை உணர்வதின் களிப்பில் மூழ்கி இருப்பதினாலும், பரிசுத்தப்படுத்த வேண்டும்.
ஒவ்வொருவருள்ளும் ப்ரேம தத்துவம் ஆத்மா ரூபத்தில் உள்ளது.
ஆத்மா அளவற்றதும்,நிரந்தரமானதும் ஆகும்- பாபா