azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 06 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 06 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

It was said (by a devotee who spoke) the world is becoming full of Sai (Saimayam), that the name of Sai is on everyone’s lips. I want it to go deeper. And I do not insist that it should be the Name “Sai”. The world must become Paramatma-mayam (suffused with the Supreme Lord), that is all; however many Names and Forms that the Paramatma may have on the lips of people and before their mental eyes. It is the same substance poured into different moulds. Like sugar dolls that children seek - cats and dogs, cows and horses, they are all of the self-same sweetness; this child prefers this shape and this name; the other one weeps for another doll. The same divine substance appears in different times and places, assuming different Names. When the forces of evil and hatred overwhelm them, the Good accept the Lord as their Charioteer, and He enables them to overpower foes. (Divine Discourse, Feb 26, 1961)
THERE IS ONLY ONE GOD AND HE IS OMNIPRESENT- BABA
உலகமே சாய் மயமாக ஆகிக் கொண்டு இருக்கிறது, சாயின் நாமம் ஒவ்வொருவரின் உதடுகளிலும் இருக்கிறது என்று (முன்னால் பேசிய ஒரு பக்தரால்) கூறப்பட்டது. நான் அதை விட ஆழமாகச் செல்ல வேண்டும் என விரும்புகிறேன். அது ‘’ சாயின்’’ நாமமாக இருக்க வேண்டும் என நான் வலியுறுத்தவில்லை. மக்களின் உதடுகளிலும் மனக்கண்கள் முன்னும் பரமாத்மாவின் எவ்வளவு எண்ணிக்கையிலான நாமங்களும் ரூபங்களும் இருந்தாலும் கூட,உலகமே பரமாத்ம மயமாக ஆக வேண்டும் ( பரமாத்மாவில் தோய்ந்து இருக்க வேண்டும்) அவ்வளவு தான். ஒரே பொருள் தான் பல வார்ப்புக்களில் ஊற்றப்பட்டுள்ளது. குழந்தைகள் நாடும், பூனைகள் மற்றும் நாய்கள், பசுக்கள் மற்றும் குதிரைகள் உருவத்தில் உள்ள சர்க்கரை பொம்மைகளைப் போல, அவை அனைத்தும் அதே இனிமையால் ஆனவையே; இந்தக் குழந்தை இந்த ரூபத்தையும் இந்த நாமத்தையும் விரும்புகிறது; மற்றொன்றோ வேறு ஒரு பொம்மைக்காக அழுகிறது. அதே தெய்வீகப் பொருளே, வெவ்வேறு காலங்களிலும், இடங்களிலும், வெவ்வேறு நாமங்களை ஏற்று தோன்றுகிறது. தீய மற்றும் த்வேஷத்தின் படைகள் அவர்களை ஆக்ரமிக்கும் போது, நல்லவர்கள் இறைவனை அவர்களது சாரதியாக ஏற்றுக் கொள்ளுகின்றனர்; அவன் எதிரிகளை அவர்கள் வெல்லுமாறு செய்கிறான்.
இறைவன் ஒருவனே; அவன் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்- பாபா