azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 04 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 04 Sep 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Why is there so much anarchy and confusion in the world today? Why is there no peace? Is it because there are no educated people, and is it because there are no educational institutions? No, there are plenty of them, but the educated people do not have the necessary culture and breadth of vision along with their education. Our country has been known as the spiritual treasure house. Yet today we are forgetting the spiritual treasure and the real strength of our country. Children are not understanding even the meaning of education. For the root word ‘Vid’ if you add ‘Ya’ then you get Vidya (education). Here ‘Vid’ stands for illumination and ‘Ya’ stands for that. Therefore, that which gives illumination and light is Vidya. That which gives you light and sheds your ignorance and that which gives you wisdom and superior knowledge can alone be called Vidya. What promotes ignorance and darkness cannot be called Vidya. (Summer Roses on the Blue Mountains, 1976, Ch 1)
GOOD EDUCATION MUST BE SUCH THAT IT COVERS BOTH WORLDLY AND SPIRITUAL MATTERS. - BABA
இன்று உலகில் ஏன் இவ்வளவு அராஜகமும் குழப்பமும் இருக்கிறது ? ஏன் சாந்தியே இல்லை? படித்தவர்கள் இல்லாமல் போனதாலா, கல்வி நிலையங்கள் இல்லாததாலா? இல்லை, அப்படிப் பட்டவர்கள் பெருவாரியாக உள்ளனர்; ஆனால், படித்த மக்களிடம், கல்வியுடன் கூடிய தேவையான கலாசாரமும், விசாலமான கண்ணோட்டமும் இல்லை. நம்முடைய தேசம் ஆன்மிகப் பொக்கிஷம் எனப் போற்றப்படுகிறது. இருந்த போதும், இன்று, நாம் நமது நாட்டின் ஆன்மிகப் புதையல் மற்றும் உண்மையான சக்தியை மறந்து கொண்டு இருக்கிறோம்.குழந்தைகள் கல்வியின் அர்த்தத்தைக் கூடப் புரிந்து கொள்ளவில்லை. அடிப்படை வார்த்தையான ‘’ வித் ‘’ உடன், நீங்கள் ‘’யா’’வைச் சேர்த்தால், உங்களுக்கு வித்யா (கல்வி) கிடைக்கிறது. இங்கு ‘’ வித் ‘’ என்பது பிரகாசிக்கச் செய்வதையும், ‘’யா’’ என்பது அதையும் குறிக்கிறது. எனவே எது பிரகாசிக்கச் செய்து ஒளியை அளிக்கிறதோ அதுவே வித்யா. எது உங்களுக்கு ஒளி அளித்து, உங்களது அறியாமையை நீக்குகிறதோ, எது உங்களுக்கு அறிவையும், உயர் ஞானத்தையும் அளிக்கிறதோ, அதை மட்டுமே வித்யா என அழைக்கலாம். அறியாமையையும், இருட்டையும் வளர்ப்பதை, வித்யா எனக் கூற முடியாது.
நல்ல கல்வி என்பது உலக மற்றும் ஆன்மீக விஷயங்களை உள்ளடக்கும் வகையில் இருக்க வேண்டும். - பாபா