azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 27 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 27 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The best way to get rid of weakness is to strike at the very taproot of the tree - the mistake that you are the body, with this name and this form, these senses, this intelligence and this mind. These are all the luggage you carry. Don't you say, ‘my nose, my mind, my hand, my reason’, just as you say, ‘my book, my umbrella’? Who is this ‘I’ that calls all these 'mine'? That is the real 'you'. It was there when you were born, when you were sleeping forgetful of all else, forgetful even of your body with all its equipment, internal and external. That ‘I’ cannot be harmed; it does not change, it knows no death or birth. Learn the discipline that makes you aware of this Truth and you will be ever free and bold. That is real vidya, the Aatmavidya (knowledge of the Self), which the sages have gathered for you. The thousands who come to Puttaparthi are coming here for this precious wealth; you too must, one day or the other, learn this and save yourselves. All have to reach the goal, travelling along the path of wisdom. (Divine Discourse, Feb 20, 1965)
YOU ARE ALL CASKETS OF DIVINE LOVE; SHARE IT, SPREAD IT, EXPRESS THAT LOVE IN ACTS OF SERVICE,WORDS OF EMPATHY AND COMPASSIONATE ACTS. - BABA
இந்த நாமமும், ரூபமும், புலன்களும், இந்த புத்தியும், இந்த மனமும் கொண்ட உடலே நீங்கள், என்ற பலஹீனத்தை விட்டொழிப்பதற்கான மிகச் சிறந்த வழி, அந்தத் தவறின் ஆணிவேரையே தாக்குவது தான். இவை அனைத்தும் நீங்கள் சுமந்து கொண்டு செல்லும் சாமான்களே. ‘’ எனது புத்தகம், எனது குடை‘’ என்று நீங்கள் சொல்வது போல,’’ எனது மூக்கு, எனது மனம், எனது கை, எனது புத்தி ‘’ என்று கூறுகிறீர்கள் அல்லவா? இவை அனைத்தும் ‘’ எனது ‘’ என்று சொல்லும், அந்த ‘’ நான் ‘’ யார்? அதுவே உண்மையான ‘’ நீங்கள்’’. அது, நீங்கள் பிறந்த போதும், அனைத்தையும், உங்கள் உடல் மற்றும் அதன் அக மற்றும் புற உபகரணங்களையும் கூட மறந்து நீங்கள் உறங்கிக் கொண்டு இருக்கும் போதும் கூட இருந்தது. அந்த ‘’ நானிற்கு ‘’ தீங்கிழைக்க முடியாது; அது மாறாதது, அது இறப்பையோ அல்லது பிறப்பையோ அறியாதது. இந்த சத்தியத்தை நீங்கள் உணருமாறு செய்யும் சாதனாவைக் கற்றுக் கொள்ளுங்கள்; நீங்கள் எப்போதும் சுதந்திரமாகவும், தைரியமுள்ளவர்களாகவும் ஆகி விடுவீர்கள். அதுவே உண்மையான வித்யா, முனிவர்கள் உங்களுக்காகச் சேர்த்து வைத்த ஆத்ம வித்யா. இந்த விலை மதிப்பற்ற செல்வத்திற்காகவே ஆயிரக் கணக்கானவர்கள் புட்டபர்த்திக்கு வருகிறார்கள்; நீங்களும் கூட, என்றாவது ஒரு நாள் இதைக் கற்றுக் கொண்டு, உங்களையே காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஞானத்தின் பாதையில் பயணித்து, அனைவரும் குறிக்கோளை அடைந்தே ஆக வேண்டும்.
நீங்கள் அனைவரும் தெய்வீக ப்ரேமையின் பெட்டகங்களே; அதைப் பகிர்ந்து கொண்டு, பரப்பி, அந்த ப்ரேமையை,கனிவான வார்த்தைகளிலும், கருணை நிறைந்த சேவைப் பணிகளிலும் வெளிப்படுத்துங்கள் - பாபா