azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 24 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 24 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Money can purchase drugs but mental peace and contentment alone can guarantee health. Medical experts can be hired but life cannot be secured on lease. God incarnates to foster sadhus, it is said. By sadhus, they do not mean the dwellers in Himalayan retreats; they mean the virtuous person who forms the inner reality of everyone of you, the outer appearance being but a mask which is worn to delude yourself into esteem. Everyone is a sadhu, for one is prema swarupa, shanti swarupa, amrutha swarupa (embodiment of bliss, peace and immortality). But, by allowing the crust of ego to grow thick and fast, the real nature is tarnished. By the action of sathsang (the company of God-minded persons), by systematic attention to self-control and self-improvement, one can overcome the delusion that makes one identify oneself with the body and its needs and cravings. (Divine Discourse, Sep 7, 1966)
JUST AS GOD MANIFESTS HIS SELFLESS LOVE IN THE WORLD,
EVERYONE SHOULD SHARE THEIR PURE LOVE SPONTANEOUSLY. - BABA
பணத்தால் மருந்துகளை வாங்கமுடியும்; ஆனால், மன அமைதியும், திருப்தியும் மட்டுமே ஆரோக்யத்தை உறுதி செய்ய முடியும். மருத்துவ நிபுணர்களை பணியமர்த்தலாம், ஆனால் குத்தகைக்கு உயிருடன் இருக்க முடியாது.இறைவன் சாதுக்களைக் காப்பதற்காக அவதாரம் எடுக்கிறான் என்று கூறப்படுகிறது. சாதுக்கள் என்றால், இமயமலையின் ஆசிரமங்களில் வசிப்பவர்கள் என்று பொருளல்ல; உங்களையே மரியாதைக்கு உரியவர்களாக மதிக்கும்படி ஏமாற்றுவதற்காக அணியப்படும் ஒரு முகமூடியே அன்றி வேறில்லை எனும் வெளித் தோற்றத்தைக் கொண்டு, உங்கள் ஒவ்வொருவருள்ளும் உள்ள உண்மை நிலையான நல்லொழுக்கமுள்ள மனிதரே அவர்கள். ப்ரேமஸ்வரூபர், சாந்தி ஸ்வரூபவர் மற்றும் அம்ருதஸ்வரூபரான (ஆனந்தம், சாந்தி மற்றும் அமரத்துவத்தின் திருவுருவங்கள்) ஒவ்வொருவரும் ஒரு சாதுவே. அகந்தையின் மேல் ஓட்டை தடியாகவும் வேகமாகவும் வளர அனுமதித்ததன் மூலம், உண்மை நிலை களங்கமடைந்துள்ளது. ஸத்ஸங்கத்தின் (இறைச்சிந்தனை கொண்ட மனிதர்களின் நட்பு வட்டம்) செயல்பாட்டினாலும்,சுயக்கட்டுப்பாடு மற்றும் சுய முன்னேற்றத்தின் மீது முறையான கவனத்தினாலும், உடல் மற்றும் அதனது தேவைகள் மற்றும் ஏக்கங்களோடு தன்னை இனம் கண்டு கொள்ளும் மாயையை, ஒருவர் வெல்ல முடியும்.
இறைவன் எவ்வாறு தனது தன்னலமற்ற ப்ரேமையை உலகில் வெளிப்படுத்துகிறானோ, அவ்வாறே ஒவ்வொருவரும் அவர்களது பரிசுத்தமான ப்ரேமையை தன்னிச்சையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் - பாபா