azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 22 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 22 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Another name for Vinayaka is ‘Vighneswara’. Easwara is one who is endowed with every conceivable form of wealth: riches, knowledge, health, bliss, beauty, etc. Vighneswara is the promoter of all these forms of wealth and removes all obstacles to their enjoyment. He confers all these forms of wealth on those who worship Him. Vinayaka is described as ‘Prathama Vandana’ (the first deity who should be worshipped). As everyone in the world desires wealth and prosperity, everyone offers the first place for worship to Vigneswara. It is only when the inner meanings of various aspects relating to the Divine are understood that worship can be offered to the Divine meaningfully. Unfortunately, as only the superficial and worldly meanings of the scriptural texts are expounded these days, people’s devotion is growing weaker continually. It is essential for everyone to understand the inner meaning of the Vedantic texts. (Divine Discourse, Sep 12, 1991)
THE RIGHTEOUS PATH FOR ALL PEOPLE IS TO DEVELOP FAITH IN GOD AND LEAD GODLY LIVES. - BABA
விநாயகரின் மற்றொரு பெயர் ‘’ விக்னேஸ்வரா ‘’ என்பதாகும். ஈஸ்வரா என்பவர் கற்பனை செய்து பார்க்கக் கூடிய அனைத்து விதமான செல்வங்களையும் - செல்வம், அறிவு, ஆரோக்யம், பேரின்பம், அழகு போன்ற அனைத்தையும் உடையவர்.விக்னேஸ்வரர் இந்த அனைத்து விதமான செல்வங்களையும் வளர்த்து, அவற்றை அனுபவிப்பதில் உள்ள அனைத்து தடைகளையும் நீக்குபவர். அவரை ஆராதிப்பவருக்கு இந்த அனைத்து விதமான செல்வங்களையும் அளிப்பவர்.விநாயகர், ‘’ பிரதம வந்தனா ‘’( முதன் முதலில் வழிபட வேண்டிய தெய்வம்) என்றும் வர்ணிக்கப்படுகிறார்.உலகில் ஒவ்வொருவரும் செல்வம் மற்றும் வளமையை விரும்புவதால், ஒவ்வொருவரும் வழிபாட்டில் முதல் இடத்தை விக்னேஸ்வரருக்கு அளிக்கின்றனர். தெய்வ சம்பந்தப்பட்டவற்றின் உள் அர்த்தங்களைப் புரிந்து கொண்டால் மட்டும் தான் தெய்வ வழிபாட்டை அர்த்தமுள்ள வகையில் ஆற்ற முடியும்.துரதிருஷ்ட வசமாக ஆன்மிக நூல்களின் மேலோட்டமான மற்றும் உலகியலான அர்த்தங்கள் மட்டுமே இன்று எடுத்துக் கூறப்படுவதால், மக்களின் பக்தி தொடர்ந்து வலுவிழந்து கொண்டு வருகிறது. வேதாந்த நூல்களின் உள் அர்த்தத்தை ஒவ்வொருவரும் புரிந்து கொள்வது அத்தியாவசியமாகும்.
இறைவன் மீது நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, இறைத் தன்மையான வாழ்க்கை நடத்துவதே, அனைத்து மக்களுக்கான தார்மீகப் பாதையாகும்- பாபா