azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 17 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 17 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

God is the embodiment of Love. Love is His nature. His love pervades the entire cosmos. This divine love is present in one and all. Pure Love (Prema) is described as beyond speech and mind (Anirvachaneeyam - indescribable). Divine love cannot be obtained through scholarship, wealth, or physical powers. God, who is the embodiment of love, can be attained only through love, just as the effulgent Sun can be seen, only through its own light. There is nothing more precious in this world than Divine love. God is beyond all attributes. Hence His love also is beyond attributes (Gunatita). But human love, because it is governed by attributes (Gunas), results in attachment and aversion. Love should not be based on expectations of a reward or return, like a business deal. Love is not an article of commerce, like a loan with a repayment schedule. Pure love, which is a spontaneous offering, can originate only from a pure heart. (Divine Discourse, Jan 14, 1995)
JUST AS GOD MANIFESTS HIS SELFLESS LOVE IN THE WORLD,
EVERYONE SHOULD SHARE THEIR PURE LOVE SPONTANEOUSLY. - BABA
இறைவன் ப்ரேமையின் திருவுருவம்.அவனது இயல்பு ப்ரேமையே.அவனது ப்ரேமை பிரபஞ்சமனைத்தையும் ஊடுருவி உள்ளது.இந்த தெய்வீக ப்ரேமை ஒவ்வொருவருள்ளும் உள்ளது.பரிசுத்தமான ப்ரேமை வாக்கு மற்றும் மனதிற்கு அப்பாற்பட்டது (அனிர்வாசநீயம்- விவரிக்க முடியாதது) என வர்ணிக்கப் படுகிறது. தெய்வீக ப்ரேமையை, பாண்டித்யம், செல்வம் அல்லது உடல் வலிமையின் மூலம் பெற முடியாது. எவ்வாறு பிரகாசிக்கும் சூரியனை அதனது சொந்த வெளிச்சத்தின் மூலம் மட்டுமே காண முடிகிறதோ, ப்ரேமையின் திருவருவமான இறைவனை ப்ரேமையின் மூலமே பெற முடியும். தெய்வீக ப்ரேமையை விட விலை உயர்ந்தது இந்த உலகில் எதுவும் இல்லை. இறைவன் குணங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவன். எனவே, அவனது ப்ரேமையும் குணங்களுக்கு அப்பாற்பட்டதே (குணாதீத) ஆனால், மனித ப்ரேமை குணங்களால் ஆளப்படுவதால், அது விருப்பு, வெறுப்புக்களில் முடிகிறது. ஒரு வியாபார ஒப்பந்தம் போல,வெகுமதி அல்லது வருவாயின் எதிர்பார்ப்பின் அடிப்படையில் ப்ரேமை இருக்கக் கூடாது. தவணை முறையில் திரும்ப அளிக்கப் படும் ஒரு கடனைப் போன்று ப்ரேமை ஒரு வியாபாரப் பொருளல்ல. ஒரு தன்னிச்சையான அர்ப்பணிப்பான பரிசுத்த ப்ரேமை, ஒரு பரிசுத்தமான இதயத்திலிருந்து மட்டுமே தோன்ற முடியும்.
இறைவன் எவ்வாறு தனது தன்னலமற்ற ப்ரேமையை உலகில் வெளிப்படுத்துகிறானோ, அவ்வாறே ஒவ்வொருவரும் அவர்களது பரிசுத்தமான ப்ரேமையை தன்னிச்சையாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் - பாபா