azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 14 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 14 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

I am concerned with the spiritual arts, the finest arts, rather than the fine arts. I want spiritually elevating subjects to be depicted in dance, like Radha and Krishna and their sublime relationship, which is beyond the ken of people. One must give up themes such as drunkards, evil men, power-drunk personalities, and clowns, which cater to vulgar tastes. Adjust all items of dance and dramatic representation to the spiritual urge in humanity; foster it, fertilise it, and take people a little nearer to the Goal. The human being is a compound of animal and angel, we can say. The human has in it the wolf, the monkey, the bullock, the jackal, the snake, the peacock, the bear —but beneath all these, the pure spark of Divinity is there too. It is the duty of all who cater to the senses to transform the low values that are now pervading and transmute them into higher values. (Divine Discourse, Dec 14, 1963)
EVERYONE SHOULD CULTIVATE A SPIRIT OF SACRIFICE
THAT GROWS WITH YOU, AS YOU GROW OLDER. - BABA
நுண் கலைகளை விட, தலை சிறந்த கலையான ஆன்மிகக் கலையின் மீது தான் எனக்கு அக்கறை அதிகம். மக்களின் அறிவு வரம்பிற்கு அப்பாற்பட்ட, ராதா மற்றும் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் அவர்களது விழுமிய உறவு போன்ற ஆன்மிக ரீதியில் உயர்த்தும் விஷயங்களை நடனம் சித்தரிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். வக்கிரமான ஆசைகளுக்குத் தீனி போடும், குடிகாரர்கள், தீய மனிதர்கள், பதவி வெறி பிடித்த நபர்கள் மற்றும் கோமாளிகள் போன்றவர்களைப் பற்றிய விஷயங்களை ஒருவர் கைவிட வேண்டும். அனைத்து நாட்டிய மற்றும் நாடகங்களை, மனித குலத்தின் ஆன்மிக உந்துதல்களுக்கு ஏற்றவாறு மாற்றி அமையுங்கள்; அதைப் பேணி வளர்த்து, உரமூட்டி, மனிதர்களை, அவர்களது குறிக்கோளுக்கு இன்னும் கொஞ்சம் அருகாமையில் இட்டுச் செல்லுங்கள். மனிதன், மிருகமும் தேவதையும் சேர்ந்த ஒரு கலவை என நாம் கூறலாம். மனிதன் தனக்குள் ஓநாய், குரங்கு, எருமை,நரி, பாம்பு, மயில், கரடி ஆகியவற்றைக் கொண்டவன்- இருந்தாலும் இவை அனைத்திற்கும் அடியில் பரிசுத்தமான தெய்வீகத்தின் ஓளிக்கீற்றும் கூட உள்ளது. இன்று பரவி வரும் கீழ்த்தரமான பண்புகளை புடமிட்டு உயர்நிலைப் பண்புகளாக மாற்றுவது, புலன்களுக்குத் தீனி போடும் அனைவரது கடமையாகும்.
வயது ஏற ஏற, உங்களுடனேயே கூட வளரும், ஒரு தியாக உணர்வினை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்- பாபா