azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 13 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 13 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The wrong notion that the world is real and that you are the body has been so deeply implanted in you through birth after birth, that it can be removed only by means of a very potent drug administered continuously. The drug, “Ram Ram Ram” (chanting of God’s name) must be swallowed and assimilated ceaselessly. Its curative essence will travel into every limb, every sense organ, every nerve and every drop of blood. Every atom in you will be transmuted into Ram. You must melt in the crucible and be poured into the Ram mould and become Ram. That is the fruition of real-wisdom, real devotion! This result of chanting Rama, Krishna or any other Name will be experienced by anyone, when chanted continuously with a pure heart and when absorbed in the mind! The Name alone will help control all the vagaries of the senses which drag you away into vanities! (Divine Discourse, 1 Jan 1967)
ALL ARE ONE, BE ALIKE TO EVERYONE. - BABA
இந்த உலகம் உண்மையானது மற்றும் நீங்கள் உடலே என்ற தவறான கருத்து உங்களுள் பல ஜன்மங்களாக, வெகு ஆழமாகப் பதிந்துள்ளது; அதை ஒரு சக்தி வாய்ந்த மருந்தை தொடர்ந்து அளிப்பதன் மூலம் மட்டுமே நீக்க முடியும்.’’ ராம், ராம், ராம்’’ (இறைவனது நாமஸ்மரணை) என்ற அந்த மருந்து விடாமல் விழுங்கப்பட்டு, ஜீரணிக்கப்பட வேண்டும். அதன் குணமளிக்கும் சாரம், ஒவ்வொரு அங்கம், ஒவ்வொரு புலனங்கம், ஒவ்வொரு நரம்பு மற்றும் ஒவ்வொரு துளி இரத்தத்தினுள்ளும் ஊடுருவிச் செல்லும். உங்களுள் உள்ள ஒவ்வொரு அணுவும் ஸ்ரீராமனாக மாற்றப்பட்டு விடும். நீங்கள் உலையில் உருகி, ஸ்ரீராமரின் அச்சில் ஊற்றப்பட்டு, ஸ்ரீராமராகவே ஆக வேண்டும். இதுவே உண்மையான ஞானத்தின், உண்மையான பக்தியின் பலனாகும்! எப்போது தொடர்ந்து ஒரு பரிசுத்தமான இதயத்துடன் ஜபிக்கப்பட்டு, மனதில் உட்கொள்ளப் படுகிறதோ, ராமா, கிருஷ்ணா அல்லது எந்த தெய்வ நாமத்தையும் ஜபிப்பதன் இந்தப் பலனை, யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம்! இறைவனது திருநாமம் மட்டுமே, உங்களை தற்பெருமைகளுக்கு இழுத்துச் செல்லும் புலன்களின் சஞ்சலங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்த உதவும்.
அனைவரும் ஒன்றே. அனைவரிடம் ஒன்று போல நடந்து கொள்ளுங்கள் - பாபா