azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 11 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 11 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Krishna, in fulfilling the pledge He had given to Mother Earth, rid the world of many wicked rulers and sought to establish the reign of Righteousness for the protection of the good. The Divine incarnates from age to age to protect the virtuous, punish the wicked and establish righteousness. Krishna is said to have destroyed many wicked persons. But this is not quite correct. It is their own wickedness which destroyed these evil persons. It may be asked: "Is it not Krishna who killed Kamsa?" Not at all. This is the text-book version. In truth, it was Kamsa's own heated bhrama (delusion) which killed him. He was always haunted by the fear of Krishna. His death was a result and a reaction of that fear. One's thoughts determine one’s destiny. Hence, people should cultivate good thoughts and eschew all bad feelings. God has no dislike for anyone. He envies no one. He has no ill-will towards anyone. Nor does He have favourites. The grace one gets is the result of one's own feelings. (Divine Discourse, Aug 29, 1994)
EMBODIMENTS OF LOVE! NO AMOUNT OF SCHOLARSHIP WILL GIVE YOU PEACE,
UNLESS YOU ARE FILLED WITH THE LOVE OF GOD! - BABA
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பூமாதாவிற்கு அவர் அளித்த வாக்குறுதியின் படி,பல தீய அரசர்களை உலகிலிருந்து அழித்து, நல்லவர்களைக் காப்பதற்காக, தர்மத்தின் ஆட்சியை நிலைநாட்ட விழைந்தார். இறைவன் நல்லவர்களைக் காப்பதற்கும், தீயவர்களை அழிப்பதற்கும், தர்மத்தை நிலைநாட்டுவதற்கும் ஒவ்வொரு யுகத்திலும்,அவதாரம் எடுக்கிறான். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பல தீயவர்களை அழித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இது அவ்வளவு சரியல்ல. இந்த தீய மனிதர்களின் சொந்த தீயகுணமே அவர்களை அழித்தது. ‘’ ஸ்ரீகிருஷ்ணர் அல்லவா கம்ஸனைக் கொன்றார்?’’ என்று கேட்கக் கூடும். இல்லவே இல்லை. இது புத்தகங்கள் கூறுவதாகும்.உண்மையில்,கம்ஸனின் சொந்த கொதிக்கும் ப்ரமையே அவனைக் கொன்றது. அவன் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய பயத்தால் எப்போதும் பீடிக்கப்பட்டு இருந்தான். அவனது மரணம் அந்தப் பயத்தின் விளைவும், எதிர்வினையும் ஆகும். ஒருவரது சிந்தனைகள் அவரது விதியை முடிவு செய்கின்றன.எனவே, மனிதர்கள் நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, அனைத்து தீய உணர்வுகளையும் தவிர்க்க வேண்டும். இறைவனுக்கு எவரையும் பிடிக்காது என்பதே இல்லை. அவன் எவர் மீதும் பொறாமை கொள்வதில்லை. அவனுக்கு எவர் மீதும் தீய நோக்கங்கள் இல்லை. அவனுக்குப் பிடித்தவர்கள் என்றும் எவரும் இல்லை. ஒருவர் பெறும் இறை அருளும் அவரது சொந்த உணர்வுகளின் விளைவே.
ப்ரேமையின் திருவுருவங்களே ! நீங்கள் இறைவன் பால் கொள்ளும் ப்ரேமையால் நிரம்பி இருக்கவில்லை என்றால்.எந்த அளவு பாண்டித்யம் இருந்தாலும், அது உங்களுக்கு சாந்தி தராது- பாபா