azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 06 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 06 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Today people are fear-struck because they lack self-confidence. Life is meaningless without self-confidence. From self-confidence, you get courage. Our ancients led a sacred life and performed penance without any fear in dense forests amidst wild animals and wicked demons. What was their source of courage and strength? They had no body attachment (Dehabhimana). They attached themselves to the Self (Atmabhimana). What was the weapon they carried with them? The weapon of self-confidence! With this, they could even tame wild animals like lions and tigers, and play with them fearlessly! Today, people do not have faith in the Self (Atma). They ask, “Where is Atma?” Atma is everywhere! See the same Atma (Divine) in all beings (Atmavat Sarvabhutani). With hands, feet, eyes, heads, mouth and ears pervading every being, God permeates the entire universe. (Divine Discourse, May 16, 2002)
ALL ARE ONE, BE ALIKE TO EVERYONE. - BABA
இன்று மக்கள் பயத்தினால் பீடிக்கப் பட்டு இருக்கிறார்கள்; ஏனெனில் அவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறது.தன்னம்பிக்கை இல்லை என்றால், வாழ்க்கைக்கு அர்த்தமே இல்லை.தன்னம்பிக்கையிலிருந்து உங்களுக்குத் தைரியம் கிடைக்கிறது.நமது முன்னோர்கள் ஒரு புனிதமான வாழ்க்கை நடத்தி, அடர்ந்த காடுகளில், காட்டு விலங்குகள் மற்றும் கொடிய பேய்களுக்கு இடையில் எந்தவிதமான பயமும் இன்றி தவம் புரிந்தார்கள். அவர்களது தைரியம் மற்றும் வலிமையின் மூலாதாரம் என்ன? அவர்களுக்கு உடல் பற்றுதலே (தேஹாபிமானம்) இல்லை.அவர்கள் தங்களை ஆத்மாவுடன் இணைத்துக் கொண்டார்கள் ( ஆத்மாபிமானம்). அவர்கள் தங்களுடன் எடுத்துச் சென்ற ஆயுதம் எது?அதுவே தன்னம்பிக்கை எனும் ஆயுதம் ! இதன் மூலம் அவர்கள் காட்டு விலங்குகளான சிங்கங்கள் மற்றும் புலிகளை அடக்கி, பயமின்றி அவைகளுடன் விளையாடினார்கள்! இன்று மக்களுக்கு ஆத்மாவிடம் நம்பிக்கை இல்லை. அவர்கள், ‘’ ஆத்மா எங்கே இருக்கிறது?’’என்று கேட்கிறார்கள். ஆத்மா எங்கும் இருக்கிறது! அதே ஆத்மாவை, எல்லா ஜீவராசிகளிலும் காணுங்கள் (ஆத்மவத் ஸர்வபூதானி). கைகள்,கால்கள், கண்கள், வாய் மற்றும் காதுகள் என ஒவ்வொரு ஜீவராசியிலும் பரவி, இறைவன் பிரபஞ்சமனைத்தும் ஊடுருவி இருக்கிறான்.
அனைவரும் ஒன்றே. அனைவரிடம் ஒன்று போல நடந்து கொள்ளுங்கள் - பாபா