azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 05 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 05 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

You cannot always have pleasure. Pleasure is an interval between two periods of pain. They are like sunshine and shadow. You should make efforts to look at both with equanimity. People want to get all that they desire and they get disillusioned and disappointed. The lighthouse of hope for this ocean of life is God, who is the only permanent entity. This lighthouse never fails. So you should engage yourself in Godly activities with unstinted devotion. Embodiments of Divine Atma! Spend your life in cherishing sacred thoughts, listening to good things, speaking good words, and doing good deeds. If all of you adopt this path, happiness and prosperity will reign in the world. No government or politician or any one in the world can protect you from troubles and disasters. There is only one who can protect you and that is the Supreme Lord. To seek His protection, all of you must wholeheartedly pray, "Let all people in the world enjoy bliss.” (Divine Discourse, Apr 14, 1993)
DEPRESSION, DOUBT, CONCEIT - THESE ARE RAHU AND KETHU TO THE SPIRITUAL ASPIRANT. - BABA
நீங்கள் எப்போதும் சுகமாகவே இருக்க முடியாது.சுகம் என்பது இரண்டு துக்கங்களுக்கு நடுவே உள்ள இடைவெளியாகும்.அவை சூரிய ஒளியும், நிழலும் போன்றவை. நீங்கள் இரண்டையும் சமச்சீரான மனப்பாங்குடன் அணுகுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மக்கள் தாங்கள் ஆசைப்படுவதை எல்லாம் அடைய விரும்பி, மனம் தளர்ந்து, ஏமாற்றம் அடைகிறார்கள். நிரந்தரமான இறைவனே, இந்த வாழ்க்கை எனும் கடலுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் ஆவான். இந்த கலங்கரை விளக்கம் ஒருபோதும் கைவிடுவதில்லை. எனவே, நீங்கள், தளராத பக்தியுடன், உங்களையே தெய்வீகமான பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தெய்வீக ஆத்மாவின் திருவுருவங்களே! புனிதமான சிந்தனைகளை மனதில் கொள்வதிலும், நல்ல விஷயங்களைக் கேட்பதிலும், நல்ல வார்த்தைகளைப் பேசுவதிலும், நல்ல செயல்களைச் செய்வதிலும் உங்கள் வாழ்க்கையை செலவிடுங்கள். நீங்கள் அனைவரும் இந்தப் பாதையை ஏற்றுக் கொண்டால், சந்தோஷமும், வளமையும், உலகில் ஆட்சி புரியும்.எந்த அரசாங்கமும் அல்லது அரசியல்வாதியும் அல்லது எவருமே உங்களை துன்பங்கள் மற்றும் பேரிடர்களிலிருந்து பாதுகாக்க முடியாது. உங்களைக் காத்து இரட்சிக்கக் கூடியவர் பரமாத்மா ஒருவரே. அவரது பாதுகாப்பைப் பெறுவதற்கு, நீங்கள் அனைவரும் இதயபூர்வமாக,’’ உலகில் உள்ள அனைவரும் ஆனந்தத்தை அனுபவிக்கட்டும்’’ எனப் பிரார்த்திக்க வேண்டும்.
மன அழுத்தம்,சந்தேகம்,மற்றும் அகந்தை –
இவை ஆன்மீக சாதகருக்கு ராகு, கேது போன்றவை- பாபா