azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 02 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 02 Aug 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Prahlada told his father Hiranyakasipu, "You want to conquer the three worlds, but you are failing to conquer your senses!" Be aware! If you have not mastered your internal enemies like anger, hatred, etc., how can you ever hope to conquer your external enemies? The inner enemies can be conquered only in one way, through love! It is essential to make our life worthwhile by practicing love, by subduing the six internal enemies (desire, anger, envy, greed, ego and lust) and dedicate all our actions to God. The world is in turmoil. At this juncture, it is the duty of each and every devotee to realise the Fatherhood of God and the brotherhood of mankind and counteract the evil forces which are inflicting innumerable troubles on mankind. Resorting to the potent weapon of love, each one should try to serve humanity to eradicate the forces of violence and unrighteousness which are rampant today. (Divine Discourse, Nov 23, 1986)
RIGHTEOUS ACTION AND CONTROL OF SENSES ARE ESSENTIAL FOR
THE CULTIVATION OF UNIVERSAL LOVE AND GOODNESS. - BABA
பக்த பிரஹலாதன் தனது தந்தையான ஹிரண்யகசிபுவிடம், ‘’ நீங்கள் மூன்று உலகங்களையும் வெல்ல விரும்புகிறீர்கள்; ஆனால், உங்களது புலன்களை வெல்வதில் நீங்கள் தோல்வி அடைந்து கொண்டு இருக்கிறீர்கள் ‘’ என்று கூறினான். கவனமாக இருங்கள்! உங்களது அக விரோதிகளான கோபம், த்வேஷம் ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த முடியவில்லை என்றால், உங்களது புற விரோதிகளை வெல்ல முடியும் என எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அக விரோதிகளை ஒரே ஒரு வழியில் தான் வெல்ல முடியும், ப்ரேமையின் மூலமே! ஆறு விதமான அக விரோதிகளை (காமம், க்ரோதம், மோஹம், லோபம், மதம், மாத்ஸர்யம்) அடக்கி, ப்ரேமையைக் கடைப்பிடித்து, நமது அனைத்து செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணிப்பதன் மூலம், நமது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகச் செய்வது அத்தியாவசியமாகும். உலகம் கொந்தளிப்பில் உள்ளது. இந்தத் தருணத்தில், இறைவனே தந்தை என்பதையும் மனித குலத்தின் சகோதரத்துவத்தையும் உணர்ந்து, மனித குலத்தின் மீது எண்ணற்ற துன்பங்களைச் சுமத்திக் கொண்டிருக்கும் தீய சக்திகளை எதிர்ப்பது என்பது ஒவ்வொரு பக்தனின் கடமையாகும். சக்தி வாய்ந்த ஆயுதமான ப்ரேமையின் மூலம், இன்று தலைவிரித்தாடும் வன்முறை மற்றும் அதர்மத்தின் சக்திகளை அழித்து, மனித குலத்திற்குச் சேவை செய்ய ஒவ்வொருவரும் முயல வேண்டும்.
பிரபஞ்ச மயமான ப்ரேமை மற்றும் நல்லவற்றை வளர்த்துக் கொள்ள தார்மீகமான செயல் மற்றும் புலனடக்கம் அத்தியாவசியம் – பாபா