azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 31 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 31 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

It is essential to develop an intimate relationship with God. You will be charged with divine energy when you achieve connection with Divinity. Living in the company of God is true good company (Satsanga). Satsangatve Nissangatvam, Nissangatve Nirmohatvam, Nirmohatve Nischalatatvam, Nischalatatve Jivanmukti (Good company leads to detachment, detachment makes one free from delusion, freedom from delusion leads to steadiness of mind and steadiness of mind confers liberation). But today one does not have a steady mind. All the time the mind wavers like a mad monkey. When you say, ‘my body’, ‘my mind’, ‘my Buddhi’, etc., all these are different from you. Then question yourself, who am I? The same principle of ‘I’ is present in everybody, right from a pauper to a millionaire. In order to understand this ‘I’ principle, you have to develop the spirit of sacrifice. (Divine Discourse, Jun 10, 2001)
EVERYONE SHOULD CULTIVATE A SPIRIT OF SACRIFICE
THAT GROWS WITH YOU, AS YOU GROW OLDER. - BABA
இறைவனுடன் ஒரு நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்வது அத்தியாவசியமாகும். தெய்வீகத்துடன் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டால், நீங்கள் தெய்வீக சக்தியைப் பெறுவீர்கள்.இறைவனது நட்பு வட்டத்தில் இருப்பதே உண்மையான ஸத்ஸங்கமாகும்.ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம், நிஸ்ஸங்கத்வே நிர்மோஹத்வம், நிர்மோஹத்வே நிஸ்சலதத்வம், நிஸ்சலதத்வே ஜீவன் முக்திஹி ( ஆன்றோரின் நட்பு வட்டம் பற்றின்மைக்கு இட்டுச் செல்கிறது, பற்றின்மை ஒருவருக்கு மாயையிலிருந்து விடுதலை அளிக்கிறது, மாயையிலிருந்து விடுதலை பெறுவது நிலையான மனதைத் தருகிறது, நிலையான மனம் முக்தியை அளிக்கிறது). ஆனால், இன்று ஒருவருக்கு ஒரு நிலையான மனம் இருப்பதில்லை. எப்போது பார்த்தாலும் மனம் ஒரு பித்துப் பிடித்த குரங்கைப் போல அலைந்து திரிகிறது. எப்போது நீங்கள், ‘’ என் உடல்’’, ‘’ என் மனம்’’, ‘’ என் புத்தி’’ என்றெல்லாம் கூறுகிறீர்களோ, இவை அனைத்தும் உங்களிலிருந்து வேறு பட்டவையே. பின்னர், உங்களையே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள், நான் யார்? ‘’ நான்’’ என்ற அதே தத்துவம் தான் ஒரு பாமரனிலிருந்து பணக்காரர் வரை, ஒவ்வொருவரிலும் உள்ளது. இந்த ‘’ நான்’’ என்ற தத்துவத்தைப் புரிந்து கொள்வதற்கு, நீங்கள் தியாக உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வயது ஏற ஏற, உங்களுடனேயே கூட வளரும், ஒரு தியாக உணர்வினை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்- பாபா