azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 26 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 26 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

To adore Name and Form is against the basic teaching of Vedanta; for, you must educate yourself into ignoring the evanescent, temporary and superficial. Unless you have discovered your identity with all, and the identity of all within oneself, you cannot win the waveless calmness, the steady flame! Give up the fancy for the fantastic objective world, give up until you reach the stage, when there is no "giver-gift-giving," when there is no "beginning-continuing-ending." Sage Narada learnt from sage Sanathkumara that he can acquire Shanti (peace) only when he knows that he is an embodiment of Shanti! Ashanti (restlessness) is something that possesses one like a phobia which has no grounding! Shake it off! You are free! It is the role that is tragic; not the actor! Remind yourself that it is a play and that you are playing the role of a tragic hero! Sage Narada learnt this and his equanimity was never again disturbed! (Divine Discourse, Jan 14, 1971)
THE INDIVIDUAL FILLED WITH LOVE HAS PEACE OF MIND, IS PURE AT HEART AND
IS UNRUFFLED BY ANY ADVERSE CIRCUMSTANCES, FAILURES OR LOSSES. - BABA
நாம, ரூபங்களைப் போற்றுவது என்பது வேதாந்தத்தின் அடிப்படைப் போதனைகளுக்கு எதிரானது; ஏனெனில், நிலையற்ற, தற்காலிக மற்றும் மேலோட்டமானவற்றை புறக்கணிக்க நீங்கள் உங்களுக்கே கற்பித்துக் கொள்ள வேண்டும். அனைத்துடனும் உங்கள் அடையாளத்தையும், உங்களுக்குள்ளேயே அனைத்தின் அடையாளத்தையும் நீங்கள் கண்டு பிடித்தாலொழிய, நீங்கள் அலை இல்லாத அமைதியை, நிலையான ஜோதியை வெல்ல முடியாது! ‘’ தருபவர்- தரப்படுவது- பெறுபவர்’’ என்பதும் இல்லாத, ‘’ஆரம்பம்-தொடர்ச்சி-முடிவு’’ என்பதும் இல்லாத நிலையை நீங்கள் அடையும் வரை, பொருட்களாலான அருமையான உலகின் மீதுள்ள ஆர்வத்தை விட்டு விடுங்கள். தானே சாந்தியின் ஒரு திருவுருவம் என்பதை அறிந்து கொண்டால் மட்டுமே, அவருக்கு சாந்தி கிடைக்கும் என்பதை நாரத முனிவர், ஸனத்குமாரரிடமிருந்து கற்றுக் கொண்டார்! அசாந்தி (அமைதியின்மை), என்பது அடிப்படையே இல்லாது, ஒருவரை ஆட்கொண்டு விடும் ஒரு பயத்தைப் போன்றதாகும்! அதை உதறித் தள்ளுங்கள்! நீங்கள் சுதந்திரமடைந்து விடுவீர்கள்! ஏற்றிருக்கும் பாத்திரமே சோகமானது, நடிகரல்ல! இது ஒரு வெறும் நாடகம் தான், அதில் நீங்கள் சோகமான ஒரு பாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு நீங்களே நினைவூட்டிக் கொள்ளுங்கள். நாரத முனிவர் இதைக் கற்றுக் கொண்டார்; அவரது சமச்சீரான மனப்பாங்கு மறுபடியும் ஒரு போதும் குலையவில்லை !
ப்ரேமையால் நிரம்பிய ஒருவர், மனதில் சாந்தியுடனும், இதயத்தில் பரிசுத்தத்துடனும், எந்த பாதகமான சூழ்நிலைகள், தோல்விகள் அல்லது நஷ்டங்களில் நிலைகுலையாமலும் இருப்பார்- பாபா