azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 18 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 18 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The root cause of all anxieties and calamities of humanity is envy. In Bhagavad Gita Krishna warns, “Arjuna! You must be envy-less. Don’t get infected by envy.” Envy is invariably accompanied by hatred. These are twin villains like poisonous pests. They attack the very roots of one’s personality. A tree may be resplendent with flowers and fruits. But when the inimical worms set to work on the roots, imagine what happens to its splendour! Even as we look on admiringly at the tree’s beauty, its flowers fade, fruits fall off, and its leaves turn yellow and are scattered by the wind. At last, the tree dries up, it dies and falls! So too, when envy and hatred infect the heart and set to work, however intelligent and however highly educated one is, one falls! Hence learn to be happy and filled with joy when others are acclaimed as good and are respected for their virtues and ideals they hold dear! (Ch 17, Vidya Vahini)
GOOD CHARACTER IS BUILT UP BY CONSTANT PRACTICE OF GOOD ACTIONS. - BABA
மனித குலத்தின் அனைத்து கவலைகளுக்கும் பேரழிவுகளுக்கும் மூல காரணம் பொறாமையே. ஸ்ரீமத் பகவத் கீதையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ‘’ அர்ஜூனா! நீ பொறாமை அற்றவனாக இருக்க வேண்டும். பொறாமையால் பாதிக்கப் படாமல் இரு ‘’ என எச்சரிக்கிறார். வெறுப்பு என்பது பொறாமையுடன் எப்போதும் கூடவே வருவதாகும். விஷப் பூச்சிகளைப் போன்ற இரட்டை வில்லன்கள் இவைகள். ஒருவரது ஆளுமையின் ஆணி வேர்களையே தாக்குபவை இவை. ஒரு மரம் பூக்கள் மற்றும் பழங்களுடன் பூத்துக் குலுங்கக் கூடும். ஆனால் பகைவர்களான புழுக்கள் அதன் வேர்களில் வேலை செய்ய ஆரம்பித்தவுடன், அதனுடைய காந்திக்கு என்ன ஆகிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள்! நாம் அந்த மரத்தின் அழகை ரசித்துக் கொண்டு இருக்கும் போதே, அதன் மலர்கள் வாடிவிடுகின்றன, பழங்கள் உதிர்ந்து விடுகின்றன, மேலும் அதன் இலைகள் மஞ்சளாகி காற்றில் சிதறி விடுகின்றன. இறுதியில் அந்த மரம், உலர்ந்து, மடிந்து, சாய்ந்து விடுகிறது! அதைப் போலவே, எப்போது பொறாமையும், வெறுப்பும் இதயத்தைத் தொற்றிக் கொண்டு வேலை செய்ய ஆரம்பிக்கின்றனவோ, எவ்வளவு புத்திசாலியாகவும், எவ்வளவு படித்தவராக இருந்தாலும், ஒருவர் வீழ்ச்சி அடைந்து விடுகிறார்! எனவே, எப்போது மற்றவர்கள், நல்லவர்கள் என்று போற்றப் பட்டு, அவர்கள் உயிருக்கு உயிராக மதிக்கும் நல்லொழுக்கங்கள் மற்றும் இலட்சியங்களுக்காக மதிக்கப் படுகிறார்களோ, அப்போது சந்தோஷம் அடைந்து, ஆனந்தத்தால் நிரம்பி இருப்பதைக் கற்றுக் கொள்ளுங்கள்.
இடையறாத நற்செயல்களை ஆற்றுவதன் மூலமே,
நற்குணநலன்கள் உருவாக்கப் படுகின்றன- பாபா