azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 12 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 12 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Prayer does not mean petitioning to God. Prayer is an index of the experience of Atmic bliss; it’s a method to experience this bliss, share it and be immersed in it. Prayers must emanate from the heart. Prayer that is not heartfelt is utterly useless. The Lord will accept a heart without words, but He will not accept words and prayers that are not sincere and heart-felt. In fact, God Himself is described as Lord of the Heart (Hridayesha). Only when you have firm faith in this, you will be able to manifest your divinity. Regard your body as a temple in which the Trinity - Brahma, Vishnu and Maheshwara reside. There are no separate places like Vaikunta or Kailash where they dwell. These are delusions born out of ignorance. God is inside you, outside you, and around you. Don’t doubt this. If you doubt this, you cannot experience peace or happiness! Firmly recognise this truth and live accordingly. (Divine Discourse, July 29, 1988
ALWAYS PERFORM ALL ACTIONS WITH THE FIRM FAITH THAT, "WE ARE IN GOD AND GOD IS IN US." - BABA
பிரார்த்தனை என்றால், இறைவனை விண்ணப்பிப்பது என்று பொருள் அல்ல. பிரார்த்தனை, ஆத்மானந்த அனுபவத்தின் ஒரு குறியீடாகும்;அந்த ஆனந்தத்தை அனுபவிப்பதற்கான ஒரு முறையாகும்; அதைப் பகிர்ந்து கொண்டு, அதில் ஆழ்ந்திருங்கள். பிரார்த்தனைகள் இதயத்திலிருந்து எழ வேண்டும். இதய பூர்வமற்ற பிரார்த்தனை வெறும் வீணே. வார்த்தைகளற்ற ஒரு இதயத்தை, இறைவன் ஏற்றுக் கொள்வான்; ஆனால், சிரத்தையற்ற, இதயபூர்வமில்லாத வார்த்தைகளையும், பிரார்த்தனைகளையும் அவன் ஏற்றுக் கொள்வதில்லை. உண்மையில், இறைவனே, இதயத்தின் தலைவன் (ஹ்ருதயேஷா) என வர்ணிக்கப்படுகிறான்.இதில் உங்களுக்குத் திடமான நம்பிக்கை இருந்தால் மட்டுமே, நீங்கள் உங்களது தெய்வீகத்தை வெளிப்படுத்த முடியும். உங்கள் உடலை, மும்மூர்த்திகளான ப்ரம்மா, விஷ்ணு மற்றும் மகேஸ்வரன் வீற்றிருக்கும் கோவிலாகக் கருதுங்கள். அவர்கள் குடியிருப்பதற்காக வைகுண்டம் அல்லது கைலாஸம் என்ற தனிப்பட்ட இடங்கள் எதுவும் இல்லை. இவை, அறியாமையால் எழும் ப்ரமைகளாகும். இறைவன் உங்களுள்ளும், உங்களுக்கு வெளியிலும், உங்களைச் சுற்றிலும் உள்ளான். இதைச் சந்தேகிக்க வேண்டாம். இதை நீங்கள் சந்தேகித்தால், நீங்கள் சாந்தி அல்லது சந்தோஷத்தை அனுபவிக்க முடியாது. இந்த சத்தியத்தை திடமாக நம்பி அதற்கேற்ப வாழுங்கள்.
எப்போதும், '' நாம் இறைவனுள் இருக்கிறோம் மற்றும் இறைவன் நம்முள் இருக்கிறான் '' என்ற திட நம்பிக்கையுடன்,அனைத்து செயல்களையும் ஆற்றுங்கள்- பாபா