azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 11 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 11 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The Supreme Lord has given you an unbroken garland of all the good and bad you accumulated from previous lives. Since birth, this invisible garland is worn by everyone around their neck, even though one cannot physically see this. The fruits of whatever good or bad you may have done in your past, has come with you when you are born. By doing a good act, you will not get an evil result and by doing a bad act, you will not accumulate good. Whatever kind of work you do, the result will correspond to that kind of work. Therefore, from today, make up your mind to do only good things and thus you will reap, in your future lives, the benefit of good things only! To imagine and to deceive ourselves into thinking that there is no one seeing us do a bad thing, is incorrect. God (Brahman) is present within your own heart and is always functioning as a witness! (Ch 3, Summer Showers 1974)
GOOD CHARACTER IS BUILT UP BY CONSTANT PRACTICE OF GOOD ACTIONS. - BABA
முந்தைய பிறவிகளில் நீங்கள் செய்த அனைத்து நல்ல அல்ல கெட்டவைகளால் ஆன ஒரு அறுகாத மாலையை, பரமாத்மா உங்களுக்கு அளித்துள்ளார். ஒருவர் இதைக் கண்ணால் காண முடியாவிட்டாலும் கூட, பிறந்ததில் இருந்தே, ஒவ்வொருவரும், தங்களது கழுத்தில் இதை அணிந்து கொண்டுள்ளார்கள். உங்களது கடந்த பிறவிகளில் நீங்கள் செய்த நல்ல அல்லது கெட்டவைகளின் பலன்கள், நீங்கள் பிறந்த போதே உங்களுடன் வந்துள்ளன. ஒரு நல்ல செயலைச் செய்வதனால், நீங்கள் ஒரு தீய பலனைப் பெற மாட்டீர்கள்; ஒரு தீய செயலைச் செய்வதனால், ஒரு நல்லவற்றை நீங்கள் சேகரித்துக் கொள்ள மாட்டீர்கள். நீங்கள் எந்த விதமான பணியைச் செய்தாலும், அதன் பலன் அந்த விதமான பணியைப் பொறுத்தே இருக்கும். எனவே, இன்றிலிருந்து, நல்லவற்றையே செய்வது என்று உங்கள் மனதில் முடிவு செய்து கொள்ளுங்கள்; உங்களது வரும் பிறவிகளில், நல்லவற்றின் பலன்களையே இவ்வாறு நீங்கள் பெறுவீர்கள்! நாம் செய்யும் ஒரு தீய செயலை யாரும் பார்க்கவில்லை என கற்பனை செய்து கொண்டு, நம்மையே நாம் ஏமாற்றிக் கொள்வது சரியல்ல.இறைவனே ( ப்ரம்மன் ) உங்கள் சொந்த இதயத்தில் இருந்து கொண்டு, எப்போதும் ஒரு சாட்சியாக செயலாற்றிக் கொண்டு இருக்கிறான் !
இடையறாத நற்செயல்களை ஆற்றுவதன் மூலமே,
நற்குணநலன்கள் உருவாக்கப் படுகின்றன- பாபா