azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 07 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 07 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The reality is cognisable everywhere; why, it is evident most in oneself, when you earnestly seek it. You can experience it, even while performing selflessly your duty to yourself and others. I shall indicate to you today, four directives for sanctifying your lives and purifying your mind, so that you can contact the God within you. Tyaja durjana samsargam (give up the company of the wicked); Bhaja Sadhu Samagamam (welcome the chance to be among the good); Kuru punyam ahoratram (do good deeds both day and night); and Smara nithyam-anityatam (remember which is lasting and which is not). When one does not attempt to transform oneself thus, one is likely to blame God for one’s sorrows, instead of blaming one’s own unsteady faith! Such a person blames God because he or she announces oneself as a devotee too soon, and expects plentiful grace. Grace cannot be claimed by such; God must accept the devotee as His own. - Divine Discourse, Jul 02, 1985.
TRUE DEVOTION CALLS FOR UTILIZING THE MIND, SPEECH AND BODY
IN ITS FULL TO WORSHIP THE LORD. - BABA
உண்மை நிலை என்பதை எல்லா இடத்திலும் உணரலாம்; ஏன், நீங்கள் அதை ஆர்வத்துடன் தேடும்போது அது தனக்குள்ளேயே தெளிவாகத் தெரிகிறது. நீங்கள் உங்களுக்கும், மற்றவர்களுக்கும், உங்களது கடமையைத் தன்னலமற்றுச் செய்து கொண்டிருக்கும் போதும் கூட, நீங்கள் அதை அனுபவிக்க முடியும். நீங்கள் உங்களுள் உள்ள இறைவனைத் தொடர்பு கொள்வதற்கு ஏற்ப, உங்களது வாழ்க்கைகளையும், மனதையும் பரிசுத்தமாக்கிக் கொள்வதற்கான நான்கு வழிமுறைகளை நான் இன்று உங்களுக்குச் சுட்டிக் காட்டப் போகிறேன். த்யஜ துர்ஜன ஸமாஸர்கம் ( தீயவர்களின் நட்பை விட்டு விடுங்கள்); பஜ ஸாது ஸமாகமம் ( நல்லவர்களின் நட்பை நாடுவதற்கான வாய்ப்பிற்கு வரவேற்பளியுங்கள் ; குரு புண்யம் அஹோராத்ரம் ( இரவு பகலாக நற்கருமங்களைச் செய்யுங்கள்); மேலும் ஸ்மர நித்யம்- அநித்யம் ( எது நிலையானது, எது நிலையற்றது என்பதைச் சிந்தியுங்கள்). எப்போது ஒருவர் தன்னை இவ்வாறு திருத்திக் கொள்ள முயலவில்லையோ, ஒருவர், தனது துன்பங்களுக்காக, தனது அலைபாயும் சொந்த நம்பிக்கையை அல்லாது, இறைவனைக் குறை கூறக் கூடும்! இப்படிப் பட்டவர் இறைவனைக் குறை கூறுவார்;ஏனெனில், அவனோ அல்லது அவளோ தன்னை அவசர அவசரமாக பக்தன் எனப் பறை சாற்றிக் கொண்டு, பெருமளவில் இறை அருளை எதிர்பார்க்கிறார். இறை அருளை இவ்வாறு பெற முடியாது; இறைவனே பக்தனைத் தன்னுடையவன் என்று ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மனம்,வாக்கு மற்றும் காயத்தை இறை ஆராதனையில் முழுமையாகப் பயன்படுத்துவதே உண்மையான பக்தியாகும்- பாபா