azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 06 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 06 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

To render an act fit to be offered to God and pure enough to win His Grace, it must manifest Love. The brighter the manifestation, the nearer you are to God. Prema should not be modified by considerations of caste, creed, religion and so on; it cannot be tarnished by envy, malice or hate. Preserve Love from being poisoned by these evils; endeavour to cultivate hatred-less, distinction-free feelings. The root of all religions, substance of all scriptures, rendezvous of all roads, inspiration of all individuals is the Principle of Prema (Love). It is the firmest foundation for your life’s mission. It is the Light that ensures peace and prosperity of the World. Fill every word of yours with Love, fill every act of yours with Love. The word that emerges from your tongue should not stab like the knife, nor wound like an arrow. It must be a foundation of sweet nectar, a soft path of blossoms, and must shower peace and joy. - Divine Discourse, Jul 29, 1969.
LOVE IS VITAL. LOVE IS DIVINE. PRACTICE LOVE IN DAILY LIVING. - BABA
இறைவனுக்கு அர்ப்பணிக்கவும், அவனது அருளைப் பெறுவதற்கும் ஏற்ற அளவில் பரிசுத்தமாக ஒரு செயலை ஆக்குவதற்கு, அது ப்ரேமையை வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.அந்த வெளிப்பாடு எவ்வளவு பிரகாசமாக இருக்கிறதோ, நீங்கள் அந்த அளவு இறைவனுக்கு அருகாமையில் இருப்பீர்கள். குலம், இனம், மதம் போன்றவற்றைக் கருதி ப்ரேமையை மாற்றக் கூடாது; அது பொறாமை, வன்மம் அல்லது த்வேஷத்தால் மாசடையக் கூடாது. இந்தத் தீமைகளால் விஷமயமாக்கப் படாமல் ப்ரேமையை பாதுகாத்துக் கொள்ளுங்கள்; த்வேஷமற்ற, வித்தியாசங்களற்ற உணர்வுகளை வளர்த்துக் கொள்ளப் பாடுபடுங்கள்.அனைத்து மதங்களின் ஆணி வேரும்,அனைத்து சாஸ்திரங்களின் சாரமும், அனைத்து பாதைகளின் சந்திக்கும் இடமும், அனைத்து மனிதர்களின் உத்வேகமும், ப்ரேம தத்துவமே. உங்களது வாழ்க்கையின் குறிக்கோளுக்கான, மிக உறுதியான அடித்தளமும் இதுவே. உலகத்தின் சாந்தி, சந்தோஷங்களை உறுதி செய்யும் ஜோதியும் இதுவே. உங்களது ஒவ்வொரு வார்த்தையையும் ப்ரேமையால் நிரப்புங்கள்; உங்களது ஒவ்வொரு செயலையும் ப்ரேமையால் நிரப்புங்கள். உங்களது நாக்கிலிருந்து வெளிப்படும் சொல், ஒரு கத்தியைப் போலக் குத்தவும் கூடாது, ஒரு அம்பைப் போலக் காயப்படுத்துவும் கூடாது. அது இனிய அமுதத்தின் ஒரு ஊற்றாகவும், மிருதுவான பூக்களின் ஒரு பாதையாகவும் இருந்து,சாந்தி,சந்தோஷங்களைப் பொழிய வேண்டும்.
ப்ரேமை இன்றியமையாதது. ப்ரேமை தெய்வீகமானது.
அன்றாட வாழ்க்கையில் ப்ரேமையைக் கடைப்பிடியுங்கள் - பாபா