azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 04 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 04 Jul 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Love for Love's sake; do not manifest it for the sake of material objects or for the fulfillment of worldly desires. Desire begets anger, anger provokes sin, and under its impact, friends are seen as foes. Anger is at the bottom of every variety of calamity. Therefore, do not fall prey to it. Treat everyone, whoever they may be with the all-inclusive compassion of Love. This constructive empathy has to become the spontaneous reaction of all mankind. Saturate your every breath, while you inhale and while you exhale, with Love. Saturate each moment with Love. Love knows no fear. Love shuns falsehood. Fear drags man into falsehood, injustice and wrong. Love does not crave for praise; that is its strength. Only those who have no Love in them seek reward and reputation. The reward for Love is Love itself. Selfless love is the highest duty, the noblest Godliness. - Divine Discourse, Jul 29, 1969.
YOU WORSHIP WITH FAITH AND YOU EXPERIENCE GRACE.
FAITH RESULTS IN GRACE, WITHOUT YOUR BEING AWARE OF IT. - BABA
அன்புக்காகவே, அன்பைக் காட்டுங்கள்; உலகியலான பொருட்கள் அல்லது உலகியலான ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக அதை வெளிப்படுத்தாதீர்கள். ஆசை, கோபத்தை உண்டாக்குகிறது; கோபம் பாவத்தைத் தூண்டுகிறது; அதனது பாதிப்பால், நண்பர்களே, எதிரிகளாகத் தோன்றுகிறார்கள். ஒவ்வொரு விதமான பேராபத்திற்கும் அடிப்படை கோபமே. எனவே, அதற்கு இரையாகி விடாதீர்கள்.அவர்கள் யாராக இருந்தாலும், ஒவ்வொருவரையும், அனைத்தையும் அரவணைக்கும் அன்பின் பரிவோடு நடத்துங்கள். இந்த ஆக்க பூர்வமான பச்சாதாபம், அனைத்து மனிதகுலத்தின் தன்னிச்சையான எதிர்வினையாக ஆக வேண்டும். நீங்கள் உள்வாங்கும் போதும், வெளி விடும் போதும், உங்களது ஒவ்வொரு மூச்சையும் அன்பால் நிரம்பி இருக்குமாறு செய்யுங்கள். ஒவ்வொரு தருணத்தையும் அன்பில் தோய்த்திருங்கள். அன்பு, அச்சம் அறியாதது. அன்பு, பொய்மையை வெறுத்து ஒதுக்குகிறது. அச்சம், மனிதனை , பொய்மை,அநீதி மற்றும் தவறுக்கு இழுத்துச் செல்கிறது. அன்பு, புகழ்ச்சிக்காக ஏங்குவதில்லை; அதுவே அதன் வலிமையாகும். தங்களுள் அன்பு அற்றவர்களே, வெகுமதியையும், புகழையும் நாடுவார்கள். அன்பின் வெகுமதி, அன்பே.தன்னலமற்ற அன்பு, மிக உயர்ந்த கடமையும், உன்னதமான இறைத்தன்மையும் ஆகும்.
நம்பிக்கையுடன் வழிபடுங்கள், இறை அருளை அனுபவிப்பீர்கள்; நம்பிக்கை, நீங்கள் அறியாமலே, இறை அருளைப் பெற்றுத் தருகிறது- பாபா