azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 30 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 30 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The ideas and pronouncements of others may often be personal, or they may induce feelings of hatred between people. Why should we accept them as ours and mould our feelings accordingly? We should not try to shape our feelings and patterns of behaviour to conform to those of others. We should not relinquish our faith, our experience, and our innate holiness. We may not always be able to know the reasons for our faith. It originates and is shaped by our own personal likes and dislikes, our own dominant feelings. But we must not become the target for anger, hatred and jealousy and the evil deeds into which they lead us. Cultivate wide and inclusive feelings. Only then the aspirant is entitled to acquire higher learning. Only then you will earn respect in society. Keep far away from narrow, selfish thoughts, feelings, and plans. (Ch 16, Vidya Vahini)
YOU WORSHIP WITH FAITH AND YOU EXPERIENCE GRACE.
FAITH RESULTS IN GRACE, WITHOUT YOUR BEING AWARE OF IT. - BABA
மற்றவர்களின் கருத்துக்களும் அறிவிப்புகளும் பெரும்பாலும் தனிப்பட்டதாக இருக்கலாம் அல்லது அவை மக்களிடையே வெறுப்பு உணர்வைத் தூண்டக்கூடும். அவற்றை ஏன், நாம் நம்முடையதாக ஏற்றுக் கொண்டு, நம்முடைய உணர்வுகளை அதற்கேற்ப உருவாக்கிக் கொள்ள வேண்டும்? மற்றவர்களின் உணர்வுகளுக்கு இணங்க நம் உணர்வுகளையும், நடத்தை முறைகளையும் வடிவமைக்க நாம் முயற்சிக்கக்கூடாது. நம்முடைய விசுவாசத்தையும், அனுபவத்தையும், நம்முடைய உள்ளார்ந்த பரிசுத்தத்தையும் நாம் கைவிடக்கூடாது. நம்முடைய விசுவாசத்திற்கான காரணங்களை நாம் எப்போதும் அறிய முடியாமல் போகலாம். இது நம்முடைய சொந்த ஆதிக்க உணர்வுகளான, நமது சொந்த விருப்பங்கள் மற்றும் விருப்பு வெறுப்புகளிலிருந்து தோன்றி ,வடிவமைக்கப்படுகிறது. ஆனால், நாம், கோபம், த்வேஷம் மற்றும் பொறாமைக்கும், அவை நம்மை இட்டுச் செல்லும் தீய செயல்களுக்கும் குறியாகி விடக் கூடாது. பரந்த மற்றும் அனைத்தையும் அரவணைக்கும் உணர்வுகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அதன் பிறகே, ஒரு ஆன்மிக சாதகர் உயர் கல்வியைப் பெறத் தகுதியுள்ளவராக ஆகிறார்.அதன் பிறகே, நீங்கள் சமூகத்தில் மரியாதையைப் பெறுவீர்கள். குறுகிய, சுயநலமான சிந்தனைகள், உணர்வுகள் மற்றும் திட்டங்களில் இருந்து வெகு தூரத்தில் விலகி இருங்கள்.
நம்பிக்கையுடன் வழிபடுங்கள், இறை அருளை அனுபவிப்பீர்கள்; நம்பிக்கை, நீங்கள் அறியாமலே, இறை அருளைப் பெற்றுத் தருகிறது- பாபா