azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 28 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 28 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The student seeking spiritual knowledge (vidya) must possess kindness, compassion, and love toward all living beings. Kindness to all beings should be the students' very nature. If it is absent, the student becomes a boor. More than anything else, spirituality is being compassionate toward living beings. If a person bears ill will against any being, his or her education has no meaning. The advice given in the Gita - adweshta sarva bhutanam - bear no ill-will toward any or all beings, conveys this message. In the same manner, Bhagawad Gita warns that any insult or injury or even neglect directed against any living being is an act that insults, injures or neglects the Divine (Sarva jiva thiraskaram Keshavam prati gacchati). The narrow vision that is limited to one’s family or community must be given up. Uniform compassion shown in this manner transforms itself into well-being for all the recipients. Wishing well for all is the sign of one who has earned spiritual knowledge. (Ch 16, Vidya Vahini)
IF THERE IS NO TRANSFORMATION OF THE HEART,
OF WHAT AVAIL ARE SPIRITUAL SADHANAS? - BABA
ஆன்மிகக் கல்வியை (வித்யா) நாடும் மாணவருக்கு, அனைத்து ஜீவராசிகளிடமும் கனிவு, பரிவு மற்றும் ப்ரேமை இருக்க வேண்டும்.அனைத்து ஜீவராசிகளிடமும் கனிவு கொண்டிருப்பது, மாணவனின் இயல்பாகவே இருக்க வேண்டும். அது இல்லை என்றால், மாணவன் ஒரு நாகரீகம் அற்றவனாகவே ஆகி விடுவான். எல்லாவற்றையும் விட, ஆன்மிகம் என்பது அனைத்து ஜீவராசிகளிடமும் கருணையுடன் இருப்பதாகும். ஒரு மனிதர், எவர் மீதாவது பகைமை உணர்வு கொண்டிருந்தால், அவனது அல்லது அவளது கல்விக்கு எந்த அர்த்தமும் இல்லை.ஸ்ரீமத் பகவத் கீதையின் அறிவுரையான, அத்வேஷ்டா ஸர்வ பூதானாம்- அனைத்து ஜீவராசிகளிடமும் த்வேஷம் இன்றி இருக்கவும் என்பது இந்தக் கூற்றை உறுதி செய்கிறது. அதே போன்று ஸ்ரீமத் பகவத் கீதை, எந்த ஜீவராசியின் மீது செலுத்தப்படும் அவமானம் அல்லது காயம் அல்லது புறக்கணிப்பு ஆகியவை, தெய்வத்தின் மீதே செலுத்தப்படும் அவமானங்கள், காயங்கள் மற்றும் புறக்கணிப்புக்களான செயலாகும் ( ஸர்வ ஜீவ திரஸ்காரம் கேசவம் பிரதிகச்சதி) என எச்சரிக்கிறது. ஒருவரது குடும்பம் அல்லது குலத்தை மட்டுமே கவனிக்கும் குறுகிய கண்ணோட்டம் விட்டு விடப் பட வேண்டும். இவ்வாறு, ஒரே மாதிரியான கருணை கொண்டிருப்பது தானாகவே, அதைப் பெறும் அனைவரது நலனாக மாறி விடும். அனைவரது நலனையும் விரும்புவது என்பது, ஆன்மிகக் கல்வியைப் பெற்ற ஒருவரின் அடையாளச் சின்னமாகும்.
இதயத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்றால்,
ஆன்மீக சாதனைகளால் என்ன பயன்? - பாபா