azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 27 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 27 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

It is said that the Lord wishes that His devotees should be happier, more content and courageous than the rest. Devotion ought to make a person so, but all devotees do not cultivate these virtuous traits deep enough. Many let precious opportunities go wasted! If a father gives each of his children hundred acres of land, one may tend it well and reap golden harvests from it: another may allow it to lay barren and sink themselves into misery. The equipment each brought from their previous lives may be different, so there is no point in blaming the father for this state of affairs. Even within the family, the blood of one person may be fatal when transfused into another person, isn’t it? It is common for spiritual strength to be less in one and more in another; it is proportionate to the efforts of each, now and in the past. God’s grace is blemishless like light: One person does good using light; another executes an evil plan! Make the light within you shine! (Divine Discourse, Jan 25, 1963)
TRUE DEVOTION CALLS FOR UTILIZING THE MIND, SPEECH AND BODY
IN ITS FULL TO WORSHIP THE LORD. - BABA
தனது பக்தர்கள் மற்றவர்களை விட அதிக சந்தோஷமாகவும், அதிக திருப்தி அடைந்தவர்களாகவும், தைரியமானவர்களாகவும் இருக்க வேண்டும் என இறைவன் விரும்புகிறான் எனக் கூறப்படுகிறது. பக்தி ஒரு மனிதரை அவ்வாறு தான் ஆக்க வேண்டும், ஆனால், அனைத்து பக்தர்களும் இந்த சீரிய பண்புகளை தேவையான அளவு ஆழமாக வளர்த்துக் கொள்வதில்லை. பலர் விலைமதிப்புள்ள வாய்ப்புக்களை வீணடித்து விடுகிறார்கள்! ஒரு தந்தை அவரது ஒவ்வொரு பிள்ளைக்கும் நூறு ஏக்கர் நிலம் அளித்தால், ஒருவர் அதை நன்றாக பராமரித்து, அதிலிருந்து நல்ல அறுவடையை ஈட்டுவார்; மற்றும் ஒருவர் அதைத் தரிசாக விட்டு விட்டு, தங்களையே துக்கத்தில் ஆழ்த்திக் கொண்டு விடுவார். அவர்கள் தங்களது முந்தைய பிறவிகளில் இருந்து கொண்டு வந்த உபகரணங்கள் வெவ்வேறாக இருக்கலாம்; எனவே, இந்த நிலமைக்குத் தந்தையைக் குறை கூறுவதில் அர்த்தமில்லை. குடும்பத்திற்கு உள்ளேயே, ஒருவரது ரத்தம் மற்றொருவருக்கு ஏற்றப் பட்டால் அது மரணத்தில் முடியக் கூடும் இல்லையா? ஆன்மிக வலிமை ஒருவரில் குறைவாகவும் மற்றும் ஒருவரில் அதிகமாகவும் இருப்பது சகஜமே; அது, கடந்த காலத்திலும், இப்பொழுதும், ஒவ்வொருவர் செய்யும் முயற்சிக்கு ஏற்பவே இருக்கும். இறைவனது அருள் ஒளியைப் போல அப்பழுக்கற்றது; ஒருவர் ஒளியைப் பயன்படுத்தி நல்லவற்றைச் செய்யலாம்; மற்றொருவர் ஒரு கொடிய திட்டத்தை நிறைவற்றலாம்! உங்களுள் உள்ள ஜோதியை ஒளிவிட்டுத் திகழுமாறு செய்யுங்கள்!
மனம்,வாக்கு மற்றும் காயத்தை இறை ஆராதனையில் முழுமையாகப் பயன்படுத்துவதே உண்மையான பக்தியாகும்- பாபா