azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 10 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 10 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Learn to do good things with the body; contemplate about good things with your mind. Cultivate good thoughts and perform good deeds. Sometimes, people ask: “Yes, we should learn to love everyone, but what should be done if the other person hates us in spite of our loving them so much?” Why should you be bothered whether others reciprocate your love or not? Your duty is to see that you do not swerve from the right path. If you also hate, how can you claim that you are still good? Endeavour your best to influence and transform others, but do not swerve from being good. I will give an example with Myself as the basis: I love everyone — I love even those who do not love Me. I do not ask whether they are loving Me or not. We must see whether our love is pure or not. Hatred has no place at all in Me. People who do not want Me also come to Me when need arises and bend before Me. To delve deep and experience true love, you must shed all bodily considerations, and cultivate Universal Vision (Atma drishti). (Ch 15, Summer Showers 1978)
WHOEVER LOVES AND SERVES ALL, THE LORD LOVES AND HONOURS THEM! - BABA
உடலைக் கொண்டு நல்லவற்றைச் செய்யக் கற்றுக் கொள்ளுங்கள்; மனதில் நல்ல விஷயங்களைப் பற்றிச் சிந்தியுங்கள். நற்சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு, நற்செயல்களை ஆற்றுங்கள்.சில சமயம் , மக்கள், ‘’ ஆம், நாம் ஒவ்வொருவரையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளத் தான் வேண்டும், ஆனால், நாம் அவர்களை எவ்வளவு தான் நேசித்தாலும் கூட, அடுத்த மனிதர் நம்மை வெறுத்தால் என்ன செய்வது?’’ என்று கேட்பார்கள். மற்றவர்கள் உங்கள் ப்ரேமையை திருப்பி அளிக்கிறார்களா என்பதைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப் பட வேண்டும்? சரியான பாதையிலிருந்து நீங்கள் விலகிச் செல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வதே உங்கள் கடமை. நீங்களும் வெறுத்தால், நீங்கள் நல்லவர்களாக இருக்கிறீர்கள் என்று நீங்கள் எப்படிக் கூறிக் கொள்ள முடியும்? உங்களால் முடிந்த வரை மற்றவர் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அவர்களைத் திருத்தப் பாடுபடுங்கள், ஆனால் நல்லவராக இருப்பதிலிருந்து விலகி விடாதீர்கள். நான் என்னையே ஆதாரமாகக் கொண்டு ஒரு உதாரணம் தருகிறேன். நான் எல்லோரையும் நேசிக்கிறேன்- என்னை நேசிக்காதவர்களையும் கூட நான் நேசிக்கிறேன். அவர்கள் என்னை நேசிக்கிறார்களா இல்லையா என்று நான் கேட்பதில்லை. நமது ப்ரேமை பரிசுத்தமானதா இல்லையா என்று நாம் பார்க்க வேண்டும். த்வேஷத்திற்கு என்னிடத்தில் இடமே இல்லை. என்னை விரும்பாதவர்கள் கூட, தேவை ஏற்பட்டால், என்னிடம் வந்து, என் முன் பணிகிறார்கள். உண்மையான ப்ரேமையை ஆழ்ந்து அனுபவிக்க, நீங்கள் அனைத்து உடல் பற்றுதல்களையும் விட்டு விட்டு, பிரபஞ்சமயமான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
எவர் ஒருவர் அனைவரையும் நேசித்து, அனைவருக்கும் சேவை புரிகிறாரோ, அவர்களை, இறைவனும் நேசித்து கௌரவிக்கிறான் - பாபா