azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 09 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 09 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

There are two kinds of essential reforms (samskara). One is based on the gunas (good qualities) and the other is based on doshas (defects). The first is comparable to watering a fruit-bearing tree, the second is comparable to removing dust from the surface of a mirror. Giving water and manure to a fruit tree in order to get the fruit (of good qualities) may be referred to as the Upasana Khanda (aspect relating to worship). This involves the act of offering pure selfless love to God and thereby seeking Him. To regard our daily work as being related to God is the aspect of Karma Khanda (relating to the path of Karma). The process of removing the impurities from our mind and thereby seeing Atma with the help of Upasana and Karma Khanda is a very essential process. This creates a form for the Atma and gives us bliss of realisation. (Ch 15, Summer Showers 1978)
KNOW THAT THE PURPOSE OF HUMAN BIRTH IS
TO REACH THE LORD THROUGH PRAYERS AND SELFLESS SEVA. - BABA
இரண்டு வகையான இன்றியமையாத சீர்படுத்தப் பட வேண்டிய பண்புகள் (ஸம்ஸ்காரா) உள்ளன. ஒன்று குணங்களை (நற்குணங்கள்) அடிப்படையாகவும், மற்றொன்று தோஷங்களை (குறைகளை) அடிப்படையாகவும் கொண்டவை. முதலாவதை, பழங்களைத் தரும் மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதோடு ஒப்பிடலாம்; இரண்டாவதை ஒரு கண்ணாடியின் மீது படிந்துள்ள தூசியை அகற்றுவதற்கு ஒப்பிடலாம். பழங்களைப் (நற்குணங்களை) பெறுவதற்காக, ஒரு பழம் தரும் மரத்திற்கு நீரும், உரமும் அளிப்பதை உபாஸனா காண்டா (வழிபாட்டு அம்சம்) எனலாம். பரிசுத்தமான தன்னலமற்ற ப்ரேமையை இறைவனுக்கு அர்ப்பணித்து அதன் மூலம் அவனை நாடும் செயல் அதில் அடங்கும். நமது அன்றாட வேலையை இறைவனுக்கு சம்பந்தப் பட்டது எனக் கருதுவது கர்ம காண்டத்தின் (கர்ம மார்க்கத்திற்கு சம்பந்தப்பட்டது) அம்சமாகும். நமது மனதிலிருந்து அழுக்குகளை நீக்கி, அதன் மூலம் ஆத்மாவை, உபாஸனா மற்றும் கர்ம காண்டத்தின் மூலம் நாடுவது ஒரு இன்றியமையாத முறையாகும்.இது ஆத்மாவிற்கு ஒரு ரூபத்தை அளித்து, நமக்கு ஆத்ம சாக்ஷாத்காரத்தின் ஆனந்தத்தை அளிக்கிறது.
மனிதப் பிறவியின் நோக்கம் வழிபாடு மற்றும் தன்னலமற்ற சேவை ஆகியவற்றின் மூலம் தெய்வத்தை அடைவதே என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். -பாபா