azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 08 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 08 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

True education directs and counsels the mind and intellect toward earning pure (sathwic) happiness. Of course, it can be secured only by untiring effort. The scriptures declare, “Happiness cannot be acquired through happiness (Na sukhat labhyate sukham).” Only by undergoing unhappiness can happiness be won. This truth has to be instilled through spiritual education (vidya). When one knows of the bliss (ananda) that pure happiness can confer, spiritual education will become easy and palatable. Having been born as humans, all efforts must be directed to acquiring this education for immortality along with earth-bound material-centred education, for it is only education for immortality that can reveal the Atma and enable people to experience the immortal Atmic bliss (Atma-ananda). ( Vidya Vahini, Ch 11)
THE SECRET OF HAPPINESS LIES WITHIN YOU, NOT OUTSIDE. - BABA
உண்மையான கல்வி, மனதையும், புத்தியையும் பரிசுத்தமான (சாத்விக்) சந்தோஷத்தைப் பற்றி அறிவுறுத்தி, அதை நோக்கிச் செலுத்தும்.அதை, தளராத முயற்சியின் மூலம் மட்டுமே பெற முடியும். வேதங்கள், ‘’ சுகத்தை, சுகத்தின் மூலம் பெற முடியாது (ந சுகாத் லப்யதே சுகம்)’’ எனப் பறைசாற்றுகின்றன. துக்கத்தை அனுபவிப்பதின் மூலம் மட்டுமே சுகத்தைப் பெற முடியும். இந்த உண்மையை ஆன்மிகக் கல்வியின் (வித்யா) மூலம் மனதில் பதிய வைக்க வேண்டும். எப்போது ஒருவர் பரிசுத்தமான சந்தோஷம் அளிக்கும் ஆனந்தத்தைப் பற்றித் தெரிந்து கொள்கிறாரோ, அப்போதே ஆன்மிகக் கல்வி எளிதானதாகவும், ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும் ஆகி விடுகிறது. மனிதர்களாகப் பிறந்த பிறகு, அனைத்து முயற்சிகளும், உலகியலான பொருட்களை மையமாகக் கொண்ட கல்வியுடன் கூடவே, இந்த அமரத்துவத்திற்கான கல்வியையும் அடைவதை நோக்கிச் செலுத்தப் பட வேண்டும்; ஏனெனில், அமரத்துவத்திற்கான கல்வியே ஆத்மாவை வெளிப்படுத்தி, மக்களை நிரந்தரமான ஆத்ம ஆனந்தத்தை அனுபவிக்குமாறு செய்யும்.
சந்தோஷத்தின் ரகசியம் உங்களுள்ளேயே இருக்கிறது, வெளியில் அல்ல- பாபா