azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 06 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 06 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

There is a second type of happiness: On account of the impact of external objects on the senses of perception, pleasure mistaken as nectar is aroused. But, in time, the pleasure turns into bitter and unpleasant poison. This is passionate (rajasic) happiness. When one welcomes this passionate sensory pleasure, one's strength, awareness, intelligence, and enthusiasm to reach the four goals of human endeavour - dharma, wealth (artha), righteous desire (kama), and liberation (moksha) - become weak, because one's interest declines. The third type of happiness arises from ignorance (tamas). It dulls the intellect from beginning to the end. It finds satisfaction in sleep, slothfulness, and faults, and it derives happiness therefrom. The dull (tamasic) person ignores the path that leads to the awareness of the Atma and pays no attention to it throughout life. (Vidya Vahini, Ch 11)
HAPPINESS RESULTS NOT WHEN DESIRES ARE FULFILLED, BUT WHEN THEY ARE CONTROLLED. - BABA
ஒரு இரண்டாவது விதமான சந்தோஷம் இருக்கிறது; வெளிப்புறப் பொருட்களால் ஞானேந்திரியங்களில் ஏற்படும் தாக்கத்தின் காரணமாக, அமிர்தம் எனத் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் இன்பம் எழுப்பப் படுகிறது. ஆனால், காலப்போக்கில், அந்த இன்பமே, கசப்பான மற்றும் விரும்பத் தகாத விஷமாக மாறி விடுகிறது. இதுவே உணர்ச்சி (ரஜோ) மயமான இன்பமாகும். இப்படிப் பட்ட ரஜோ மயமான புலனின்பத்தை ஒருவர் வரவேற்கும் போது, மனித முயற்சியின் நான்கு முக்கியக் குறிக்கோள்களான தர்மம், செல்வம் (அர்த்தம்), நியாயமான ஆசை (காமம்) மற்றும் விடுதலை (மோக்ஷம்) ஆகியவற்றை அடைவதற்குத் தேவையான, ஒருவரது வலிமை, விழிப்புணர்வு, புத்தி மற்றும் உற்சாகம் போன்றவை பலஹீனமடைந்து விடுகின்றன; ஏனெனில் இவற்றில் ஒருவரது ஆர்வம் குறைந்து விடுகிறது. மூன்றாவது விதமான சந்தோஷம், அறியாமையிலிருந்து (தமஸ்) எழுகிறது. இது ஆரம்பத்திலிருந்து, இறுதி வரை புத்தியை மழுங்கச் செய்து விடுகிறது. அது தூக்கம், சோம்பல் மற்றும் குறைகளில் திருப்தியைக் கண்டு, அவற்றிலிருந்து சந்தோஷத்தை அடைகிறது. ஆர்வமற்ற (தமஸிக்) மனிதன் ஆத்மாவைப் பற்றிய விழிப்புணர்வுக்கு இட்டுச் செல்லும் பாதையை உதாசீனப் படுத்தி, வாழ்க்கை முழுவதிலும் கூட அதன் மீது கவனம் செலுத்துவதில்லை.
ஆசைகள் பூர்த்தி அடையும் போது அன்றி, அவைகள் கட்டுப்படுத்தப்படும் போது தான் ஆனந்தம் கிடைக்கிறது - பாபா