azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 05 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 05 Jun 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Every being craves happiness; none long for misery. But everyone is set upon obtaining the things believed to give them joy. Those who know where one can get happiness are very few in number. Happiness is of three kinds. One type is of the nature of poison in the beginning but turns into nectar later. This is pure (sathwic) happiness, which is secured through the awareness of the Atma. That is to say, the sadhana of equanimity, control of inner and outer senses, etc., which has to be gone through, appears hard and unpleasant, and involves struggle and effort. When one succeeds in overwhelming the mind, one achieves the awareness of the Atma. This success can result only when one undergoes many ordeals and denials. The bliss that one earns afterward is the highest kind of happiness. As the fruition of all spiritual discipline, one is established in the perfect equanimity of unruffled consciousness (nirvikalpa-samadhi) and the bliss that one is filled with is indescribable. (Vidya Vahini, Ch 11.)
KEEP THE NAME OF THE LORD ALWAYS RADIANT ON YOUR TONGUE AND MIND,
WHICH WILL KEEP THE ANTICS OF THE MIND UNDER CONTROL. - BABA
ஒவ்வொரு ஜீவராசியும் சந்தோஷத்திற்காக ஏங்குகிறது; எவரும் துக்கத்தை நாடுவதில்லை. ஆனால், ஒவ்வொருவரும் அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என அவர்கள் நம்பும் பொருட்களைப் பெறுவதில் முனைந்து இருக்கிறார்கள். ஒருவருக்கு எங்கு சந்தோஷம் கிடைக்கும் என அறிந்தவர்கள் மிகச் சிலரே. சந்தோஷம் மூன்று வகைப்பட்டது. ஒரு விதம், ஆரம்பத்தில் விஷமாக இருந்து பின்னர் அமிர்தமாக மாறுவது. இது, ஆத்மாவைப் பற்றிய விழிப்புணர்வின் மூலம் பெறப்படும் பரிசுத்தமான(சாத்வீக) சந்தோஷமாகும். அதாவது, கடினமாகவும், விரும்பத் தகாததாகவும் தோன்றி, போராட்டமும், முயற்சியும் உடையதாகவும், அனுபவித்தே தீரவேண்டிய சமச்சீரான மனப்பாங்கின் சாதனை, அக மற்றும் புற புலன்களைக் கட்டுப் படுத்துவது ஆகியவையாகும். எப்போது ஒருவர் மனதை அடக்குவதில் வெற்றி அடைகிறாரோ, அவர் ஆத்மாவைப் பற்றிய விழிப்புணர்வைப் பெறுகிறார். இந்த வெற்றி, ஒருவர் பல கஷ்டங்களையும், விருப்பங்களை மறுப்பதையும் அனுபவித்த பிறகு மட்டுமே கிடைக்கும். அதன் பிறகு ஒருவர் பெறும் ஆனந்தம், தலைசிறந்த வகையான சந்தோஷமாகும்.அனைத்து ஆன்மிக சாதனைகளின் பலனாக, ஒருவர், சமச்சீரான நிலைகுலையாத விழிப்புணர்வில் (நிர்விகல்ப சமாதி) நிலை கொள்ளும் போது, ஒருவருள் நிரம்பி வழியும் ஆனந்தம் விவரிக்க முடியாததாகும். அது அமிர்தமயமான, அமரத்துவத்தின் ஆனந்திற்குச் சமமானதாகும்..
இறைநாமத்தை எப்போதும் உங்கள் நாவிலும், மனதிலும் ஒளிவிட்டுப் பிரகாசிக்குமாறு வைத்துக்கொள்ளுங்கள்; அது மனதின் கோமாளித்தனங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும். - பாபா