azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 26 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 26 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The benefit we can derive from anything is directly proportional to the faith we place in it. From adoration of gods, pilgrimages, chanting mantras, or resorting to doctors, we derive benefits only according to the measure of our faith. For the growth of faith and for the fostering of understanding, an essential requirement is purity of the heart, of the very base of thought (the kshetra), and of the level of consciousness (chittha). Without this purity, the sudden effort of self-inquiry or investigation into the self-existent Atma, while in the midst of diverse worldly and material entanglements, will be rendered fruitless, since it will not stem from an eager will. The consciousness (chittha) must first be withdrawn from the objective world (prapancha) and turned inward toward the awareness of the Atma. Seeds can sprout fast only when planted in a well-ploughed land. So too, the seed of Atmic wisdom can sprout in the heart-field (hridaya-kshetra) only when it has undergone the necessary refining process. (Vidya Vahini, Ch 9)
A PURE HEART IS THE ESSENCE OF ALL SPIRITUAL PRACTICES. - BABA
எதிலிருந்தும், நமக்குக் கிடைக்கும் பலன், அதன் மீது நாம் வைக்கும் நம்பிக்கையைப் பொறுத்தே இருக்கிறது. கடவுள்களை ஆராதிப்பதிலிருந்து , தீர்த்த யாத்திரைகள், மந்திர உச்சாடனங்கள் அல்லது மருத்துவர்களை அணுகுவது வரை,நம்முடைய நம்பிக்கையின் அளவைப் பொறுத்து மட்டுமே , நாம் பலன்களைப் பெறுகிறோம்.சிந்தனையின் அடிப்படையிலும்(க்ஷேத்ர), விழிப்புணர்வின் நிலையிலும்( சித்த), இதயத்தின் பரிசுத்தமே, நம்பிக்கையை வளர்ப்பதற்கும், புரிதலைப் பேணுவதற்கும், ஒரு இன்றியமையாத தேவையாகும். இந்தப் பரிசுத்தம் இன்றி, பலதரப்பட்ட உலகியலான மற்றும் பொருட்களின் மீதான பற்றுதல்களுக்கு இடையில், சுய பரிசோதனை அல்லது தன்னிச்சையான ஆத்ம ஆராய்ச்சிக்கான திடீர் முயற்சி, ஒரு ஆர்வமான சங்கல்பத்திலிருந்து எழாததால், பயனற்றதாகி விடும். விழிப்புணர்வு (சித்த) பொருட்களாலான இந்த உலகத்திலிருந்து ( பிரபஞ்ச), முதலில் விலக்கப்பட்டு, உள்நோக்கி ,ஆத்மாவைப் பற்றிய விழிப்புணர்வை நோக்கித் திருப்பப் பட வேண்டும். நன்கு உழப்பட்ட நிலத்தில் ஊன்றப்படும் விதைகளே, விரைவாக முளைக்க முடியும்.அதைப் போலவே, இதயம் எனும் நிலம், தேவையான சுத்திகரிப்புச் செயல்முறைக்கு உட்பட்டால் மட்டுமே, அதில் ஆத்ம ஞானம் எனும் விதை முளைக்க முடியும்.
ஒரு பரிசுத்தமான இதயமே, அனைத்து ஆன்மீக சாதனைகளின் சாரம் ஆகும். - பாபா