azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 21 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 21 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

These days, listening to lectures and discourses has become just an itch, a craze. After hearing them once, people imagine they have known all. Don’t just listen, practice and experience. Do not rest content with merely listening to advice. What you have listened to must later be reflected upon, and what has thus been imprinted on the mind has later to be experienced and expressed in thought, word and deed. Only thus can the truth be a treasure in the heart; only then can it flow through the veins and manifest in full splendour through you. The real purpose of the search for truth is to liberate oneself. The yearning must be deep and persistent. The longing to know and experience the truth will then become a yoga, a process of union. (Vidya Vahini, Ch 9)
ALL ARE ONE, BE ALIKE TO EVERYONE. - BABA
இந்நாளில் சொற்பொழிவுகள் மற்றும் உபன்யாசங்களைக் கேட்பது என்பது ஒரு நமைச்சல் மற்றும் ஒரு வெறித்தனம் போல ஆகி விட்டது. அவற்றை ஒருமுறை கேட்ட பின் மக்கள் தங்களுக்கு அனைத்தும் தெரிந்து விட்டதாகக் கற்பனை செய்து கொள்கிறார்கள். வெறும் கேட்பதோடு மட்டும் அல்ல, அவற்றைக் கடைப்பிடித்து, அனுபவித்துப் பாருங்கள். அறிவுரையை வெறுமனே கேட்பதோடு, திருப்தி அடைந்து விடாதீர்கள். நீங்கள் எதைக் கேட்டீர்களோ, அவை பின்னர் சிந்தித்துப் பார்க்கப் பட வேண்டும்; அவ்வாறு மனதில் பதிந்து விட்டவை அனுபவிக்கப் பட்டு, அவை சிந்தனை, சொல் மற்றும் செயலில் வெளிப்படுத்தப் பட வேண்டும். அதன் பின்னரே, சத்தியம் இதயத்தில் ஒரு பொக்கிஷமாக இருக்க முடியும்; அதன் பின்னரே அது உங்களது இரத்த நாளங்களில் பாய்ந்து ஓடி, உங்கள் மூலம், தனது முழு காந்தியுடன் வெளிப்பட முடியும். சத்தியத்தைத் தேடுவதன் உண்மையான குறிக்கோள் ஒருவர் தன்னை பந்தத்திலிருந்து விடுவித்துக் கொள்வதே ஆகும். இதற்கான ஏக்கம் ஆழமாகவும், விடாமுயற்சியுடனும் இருக்க வேண்டும். சத்தியத்தை அறிந்து கொண்டு அனுபவிப்பது என்பது பின்னர் ஒரு யோகமாக ஆகி விடும்.
அனைவரும் ஒன்றே. அனைவரிடம் ஒன்று போல நடந்து கொள்ளுங்கள் - பாபா