azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 20 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 20 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

In the garden of the heart, one must plant and foster the rose of divinity, the jasmine of humility, and the champak of generosity. In the medicine chest of each student must be kept in readiness tablets of discrimination, drops of self-control, and the three powders: faith, devotion, and patience. By the use of these drugs, one can escape the serious illness called ignorance (ajnana). There are many destructive forces in the world, but, luckily, there are also, constructive forces. Students of spiritual learning should not turn into worshipers of bombs and mechanical contrivances (yantras). They must transform themselves into active individuals worshipping God (Madhava) and mantras. Authority and power are powerful intoxicants. They pollute and poison people and lead one to destruction. They breed misfortune. But spiritual knowledge will confer wholeness and good fortune on them. (Vidya Vahini, Ch 8)
A LANGUAGE IS AS SWEET AS THE TONGUE OF ITS SPEAKER. - BABA
இதயம் எனும் தோட்டத்தில், ஒருவர் தெய்வீகம் எனும் ரோஜாச் செடியையும், பணிவு எனும் மல்லிகைச் செடியையும், தாராள மனப்பாங்கு என்ற செண்பகப் பூச்செடியையும் நட்டு வளர்க்க வேண்டும். ஒவ்வொரு மாணவனின் மருந்துப் பெட்டியிலும், பகுத்தறிவு எனும் மாத்திரைகளும், சுயக்கட்டுப்பாடு எனும் சொட்டு மருந்துகளும், நம்பிக்கை, பக்தி மற்றும் பொறுமை என்ற மூன்று மருந்துப் பொடிகளும் இருக்க வேண்டும். இந்த மருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம், ஒருவர் கொடிய வியாதியான அறியாமையிலிருந்து (அக்ஞானம்) தப்ப முடியும். உலகில் பல அழிவுச் சக்திகள் இருக்கின்றன; ஆனால், அதிருஷ்ட வசமாக பல ஆக்க பூர்வமான சக்திகளும் கூட இருக்கின்றன. ஆன்மிகக் கல்வியின் மாணவர்கள் வெடி குண்டுகள் மற்றும் யந்திரங்களை ஆராதிப்பவர்களாக மாறி விடக் கூடாது. அவர்கள், தங்களை மாதவனையும், மந்திரங்களையும் ஆராதிக்கும் செயல் திறன் படைத்தவர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும். பதவியும், அதிகாரமும், சக்தி வாய்ந்த போதைப் பொருட்களாகும். அவை மனிதர்களை மாசுபடுத்தி, விஷமயமாக்கி ஒருவரை அழிவுக்கு இட்டுச் சென்று விடுகின்றன. அவை துரதிருஷ்டத்தை வளர்க்கின்றன. ஆனால் ஆன்மிக ஞானம் பூரணத்துவத்தையும், நல்ல அதிருஷ்டத்தையும் அவர்களுக்கு அளிக்கின்றது.
பேசுபவரின் பேச்சின் இனிமையைப் பொறுத்தே,
அவர் பேசும் மொழியின் இனிமை இருக்கும் - பாபா