azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 16 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 16 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

The next step (in getting rid of the ignorance of individuality, where the first is practising the attitude of, ‘I am Yours’) is: “You are mine,” where the wave demands the support of the sea as its right. The Lord has to take the responsibility of guarding and guiding the individual. The individual is important, worthy to be saved, and the Lord is bound to fulfil the need of the devotee. Surdas said, “You are mine; I will not leave You; I shall imprison You in my heart; You shall not escape.” The next stage is: “You are I” — I am but the image and You are the Reality. I have no separate individuality; there is no duality. All is One. Duality is but delusion. (Divine Discourse, Sep 8, 1963)
CULTIVATE DIVINE VISION AND VISUALIZE THE LORD IN ALL BEINGS, THINGS AND ACTIVITIES.
THAT MAKES THIS HUMAN BIRTH WORTHWHILE. - BABA
அடுத்த படி (தனித்தன்மை என்ற அறியாமையை விட்டு விடுவதற்கு, ‘’ நான் உன்னுடையவன் ‘’ என்ற மனப்பாங்கைக் கடைப்பிடிப்பதே முதல் படி),’’ நீ என்னுடையவன் ‘’ என்பதே; அதாவது அலை, கடலின் உதவியை தனது உரிமையாகக் கோருவது. தனி மனிதனைக் காத்து, வழி நடத்துவதற்கான பொறுப்பை, இறைவன் ஏற்க வேண்டும். தனி மனிதன், காப்பாற்றப் பட வேண்டிய அளவு முக்கியமானவன்; இறைவன், பக்தனின் தேவையைப் பூர்த்தி செய்தே ஆக வேண்டும். பக்த சூரதாஸர், ‘’ நீ என்னுடையவன்; நான் உன்னை விட மாட்டேன்; உன்னை என் இதயத்தில் சிறை பிடித்து வைத்து விடுவேன்; நீ தப்பிக்க முடியாது ‘’ என்று கூறினார். இதற்கு அடுத்த நிலை, ‘’ நீ, நானே’’- நான் உன்னுடைய பிரதி பிம்பமே அன்றி வேறில்லை. நீயே சத்தியம். எனக்கென்று ஒரு தனித் தன்மை இல்லை; இருமை என்பதே இல்லை. அனைத்தும் ஒன்றே. இருமை என்பது மாயையே அன்றி வேறில்லை.
தெய்வீக திருஷ்ட்டியை வளர்த்துக் கொண்டு, அனைத்து ஜீவராசிகள், பொருட்கள் மற்றும் செயல்களில் இறைவனைக் காணுங்கள். அதுவே இந்த மனிதப்பிறவியை பயனுள்ளதாக்கும் -பாபா