azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 14 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 14 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

A person living without love is as good as dead. You are having love towards your father, mother, wife, children and others. There is nothing wrong in this. But you must see God in every one of them. This is the essence of the well-known prayer: Tvameva mata cha Pita tvameva…This prayer addressed to the Supreme Being means - "Oh my Lord, You are the father, mother, friend and relative. You are knowledge and wealth. You are everything!" We should see God in every being. The whole Universe is a manifestation of Brahman (Divinity). You are divine but you are not realising it. When you do namaskaram with folded hands in obeisance, it means that you are offering your five Karmendriyas (organs of action) and five Jnanendriyas (organs of perception) to the Divine. Offering namaskaram itself emphasises unity. If you have unity and purity, Divinity will blossom there. (Divine Discourse, Apr 11, 1994)
ALL ARE ONE, BE ALIKE TO EVERYONE. - BABA
ப்ரேமை இன்றி வாழும் ஒருவர், உயிரற்ற சவமே.நீங்கள், உங்கள் தந்தை, தாய், மனைவி, மக்கள் மற்றும் பிறரின் மீது ப்ரேமை வைத்துள்ளீர்கள். இதில் தவறு எதுவும் இல்லை. ஆனால், நீங்கள் அவர்கள் ஒவ்வொருவரிலும் இறைவனைக் காண வேண்டும். ‘’ த்வமேவ மாதாச பிதா த்வமேவ…’’ என்ற பிரார்த்தனையின் சாரம் இதுவே. பரப்ரம்மத்தைப் போற்றும் இந்த பிரார்த்தனையின் பொருள்- ‘’ என் இறைவனே ! நீயே தந்தை, தாய், நண்பன் மற்றும் உறவினன். நீயே ஞானமும், செல்வமும். நீயே அனைத்தும் ஆவாய்!’’ என்பதாகும்.நாம் ஒவ்வொரு ஜீவ ராசியிலும் இறைவனைக் காண வேண்டும். இந்த பிரபஞ்சம் அனைத்துமே பரப்பிரம்மத்தின் ஒரு வெளிப்பாடே. நீங்களும் தெய்வீகமே, ஆனால் நீங்கள் இதை உணரவில்லை. நீங்கள் கரங்களைக் குவித்து வணங்கும் போது, அதன் பொருள், நீங்கள் ஐந்து கர்மேந்திரியங்களையும் (செயலாற்றும் அங்கங்கள்), ஐந்து ஞானேந்திரியங்களையும் (உணரும் அங்கங்கள்) இறைவனுக்கு அர்ப்பணிக்கிறீர்கள் என்பதே ஆகும். நமஸ்காரம் செய்வதே ஒற்றுமையைக் குறிக்கிறது. உங்களிடம் ஒற்றுமையும், தூய்மையும் இருக்குமானால், தெய்வீகம் அங்கு பரிமளிக்கும்.
அனைவரும் ஒன்றே. அனைவரிடம் ஒன்று போல நடந்து கொள்ளுங்கள் - பாபா