azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 09 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 09 May 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Mother Easwaramma imparted many noble teachings to devotees when they gathered around her. Swami gave her a small room in Prasanthi Nilayam. Many ladies would go there and plead with her, "Mother, we are here since long. Please tell Swami to grant us an interview." She would tell them, "My dear, Swami may look small to our eyes, but He does not listen to anyone; He needs no recommendation. He will give you what you deserve. You should understand and practice the divine principles of Swami." In this manner, she would give proper guidance to the devotees. One day she told Me, "Sathya! Your name and fame have spread far and wide. The whole world is coming to You. Please bestow peace on the world with Your Sankalpa (divine will).” I responded, "I don’t have to do Sankalpa for world peace. Each one must attain peace by themselves, because human beings, by nature are the embodiments of peace, truth and love." (Divine Discourse, May 6, 2003)
MAKE YOUR HOME THE SEAT OF VIRTUE, MORALITY AND LOVE. CONTROL ANGER AND GREED. THAT IS THE SIGN OF THE GENUINE DEVOTEE, NOT UNRESTRICTED SPEECH AND MOVEMENTS. - BABA
அன்னை ஈஸ்வராம்மா, அவளைச் சுற்றி இருந்த பக்தர்களுக்கு பல சீரிய போதனைகளை அளித்தார்.சுவாமி அவருக்கு பிரசாந்தி நிலயத்தில் ஒரு சிறு அறையை அளித்திருந்தார். பல பெண்கள் அவரிடம் சென்று,’’ அம்மா! எங்களுக்கு ஒரே நேர்காணல் அளிக்க வேண்டும் என்று நீங்கள் சுவாமியிடம் கூறுங்கள்’’ என்று வேண்டுவார்கள். அவள், அவர்களிடம், ‘’ பிரியமானவர்களே! சுவாமி நமது கண்களுக்கு சின்னவராகத் தெரியலாம் ஆனால், அவர் யார் சொல்வதையும் கேட்பதில்லை; அவருக்கு சிபாரிசு என்பதே தேவை இல்லை. உங்கள் தகுதிக்கு ஏற்றதை அவர் அளிப்பார். நீங்கள் அதைப் புரிந்து கொண்டு, சுவாமியின் தெய்வீகக் கோட்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும் ‘’ என்று கூறுவார். இந்த விதத்தில், அவர், பக்தர்களுக்கு சரியான வழிகாட்டுதலை அளிப்பார். ஒரு நாள் அவர் என்னிடம், ‘’ சத்யா! உன்னுடைய பெயரும், புகழும் எங்கும் பரவி உள்ளது. உலகனைத்தும் உன்னிடம் வருகின்றது. உன்னுடைய சங்கல்பத்தின் மூலம், இந்த உலகிற்கு சாந்தியை அளித்திடு.’’என்று கூறினார். நான் அதற்கு ‘’ உலக அமைதிக்காக நான் சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. ஒவ்வொருவரும் தாங்களே சாந்தியைப் பெற வேண்டும்; ஏனெனில், மனிதர்கள் இயல்பாகவே, சாந்தி, சத்யம் மற்றும் ப்ரேமையின் திருவுருவங்களே ‘’ என்று பதில் கூறினேன்.
உங்கள் இல்லங்களை, நல்லொழுக்கம், அறநெறி மற்றும் அன்பின் இருப்பிடமாக ஆக்குங்கள். கோபத்தையும், பேராசையையும் கட்டுப்படுத்துங்கள் .அதுவே உண்மையான பக்தனின் சின்னமே அன்றி, கட்டுப்பாடற்ற பேச்சு மற்றும் அலைந்து திரிதலும் அல்ல- பாபா