azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 30 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 30 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Desire breeds wishes. Wishes create birth and death. The next birth is the result of unfulfilled desires in this life! Those who have no trace of desire for material objects can achieve the awareness of the Atmic reality. In fact, the desire to know God, to love God, and to be loved by God does not bind. When awareness of God dawns in all its splendour, every worldly, sensual desire is reduced to ashes in the flames of that awareness. The individual Self will turn towards the Universal Self as soon as desire comes to an end and the Self delights in supreme peace (parama shanthi). The Self must break off all contact with non-self, so that it can earn immortality. You are a heap of thoughts. Your thoughts play a vital role in shaping your life. Hence watch your thoughts and carefully welcome only good ones! Spiritual learning (vidya) stabilises good thoughts in the mind and thus rises to the status of knowledge of the supreme Reality (Atma-vidya). (Vidya Vahini, Ch 5)
HAPPINESS RESULTS NOT WHEN DESIRES ARE FULFILLED,
BUT WHEN THEY ARE CONTROLLED. - BABA
ஆசை, விருப்பங்களை உருவாக்குகிறது. விருப்பங்கள் பிறப்பு மற்றும் இறப்பை ஏற்படுத்துகின்றன.அடுத்த பிறவி என்பது, இந்தப் பிறவியின் நிறைவேறாத ஆசைகளின் விளைவே ! உலகியலான பொருட்களின் மீதான ஆசையின் எந்தச் சுவடும் இல்லாதவர்கள், ஆத்மாவைப் பற்றிய விழிப்புணர்வைப் பெற முடியும். உண்மையில், இறைவனைத் தெரிந்து கொள்ள வேண்டும் ,இறைவனை நேசிக்க வேண்டும், இறைவனால் நேசிக்கப் பட வேண்டும் என்ற ஆசை, பந்தத்தை ஏற்படுத்துவதில்லை.எப்போது, இறைவனைப் பற்றிய விழிப்புணர்வு அதன் முழு காந்தியுடன் மலருகிறதோ, அப்போதே, ஒவ்வொரு உலகியலான, புலனாசைகள், அந்த விழிப்புணர்வின் தீப்பிழம்பில் பொசுங்கிச் சாம்பலாகி விடுகின்றன. ஆசை முடிவுக்கு வரும்போது, ஜீவாத்மா பரமாத்மாவை நோக்கித் திரும்பி, தலை சிறந்த சாந்தியில் (பரம சாந்தி) திளைத்து நிற்கிறது. ஆத்மா அமரத்துவத்தை அடைவதற்கு, ஆத்மா அல்லாதவற்றுடன் அனைத்து உறவையும் முறித்துக் கொண்டே ஆக வேண்டும். நீங்கள் சிந்தனைகளின் ஒரு குவியலே. உங்களது சிந்தனைகள் உங்கள் வாழ்க்கையை உருவாக்குவதில், ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றன. எனவே, உங்களது சிந்தனைகளைப் பார்த்து, நல்லவற்றை மட்டுமே கவனமாக வரவேற்கவும்! ஆன்மிகக் கல்வி (வித்யா), நற்சிந்தனைகளை மனதில் நிலைபெறச் செய்து, அதன் மூலம், பரப்ரம்மத்தைப் பற்றிய அறிவின் (ஆத்ம வித்யா) நிலைக்கு உயருகிறது.
ஆசைகள் பூர்த்தி அடையும் போது அன்றி, அவைகள் கட்டுப்படுத்தப்படும் போது தான் ஆனந்தம் கிடைக்கிறது - பாபா