azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 29 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 29 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Anger will pollute the earned wisdom. Unbridled desire will foul all actions. Greed will destroy devotion and dedication. Anger, desire, and greed will undermine the actions, spiritual wisdom, and devotion and make one a boor. But the root cause of anger is desire, and desire is the consequence of ignorance. Ignorance is the characteristic of the animal (pasu). The animal is that which has outward vision and accepts what the external vision conveys. The inward vision will lead a person to Pasupati, the Lord of all living beings. One who has not mastered the senses is an animal. An animal is born with qualities that cannot be eliminated so easily. It has no capacity to understand the meaning of the advice given. But people can be educated into better ways. Hence the statement in the scriptures, “For all animate beings, birth as a human is a rare achievement.” Humans are indeed the most fortunate and most holy among animals, for their inborn qualities can be sublimated. (Vidya Vahini, Ch 4)
ONE WHO HAS NOT MASTERED THE SENSES IS TRULY AN ANIMAL.
RIGHTEOUS LIVING ALONE CONFERS HAPPINESS HERE AND HEREAFTER. -BABA.
ஈட்டிய அறிவை, கோபம் மாசு படுத்தி விடும்.கட்டுக் கடங்காத ஆசை, அனைத்து செயல்களையும் கெடுத்து விடும்.பேராசை, பக்தி மற்றும் அர்ப்பணிப்பை அழித்து விடும்.கோபம், ஆசை,மற்றும் பேராசை ஆகியவை, செயல்கள், ஞானம் மற்றும் பக்தி ஆகியவற்றை வலிவற்றதாக்கி, ஒருவரை, ஒரு காட்டிமிராண்டியாக ஆக்கி விடும்.ஆனால், கோபத்தின் அடிப்படைக் காரணம் ஆசை ; அறியாமையின் விளைவே ஆசை.அறியாமை என்பது ஒரு விலங்கு ( பசு) குணமாகும். மிருகம் என்பது, வெளிப்புற கண்ணோட்டத்தைக் கொண்டு, அந்த வெளிப்புறப் பார்வை கூறும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் ஒன்றாகும். அகப் பார்வை, ஒருவரை, அனைத்து ஜீவராசிகளின் அதிபதியான பசுபதியாக ஆவதற்கு இட்டுச் செல்லும். புலன்களை அடக்கி ஆளாதவர் ஒரு மிருகமே.எளிதாக நீக்க முடியாத குணங்களோடு பிறந்ததே ஒரு மிருகமாகும். அது, தரப்படும் அறிவுரையைப் புரிந்து கொள்ளும் திறனற்றதாகும். ஆனால், மனிதர்களுக்கு, சிறந்த வழி முறைகளைப் பற்றி போதிக்க முடியும். அதனால் தான், ‘’ஜீவராசிகளில் மனிதப் பிறவி என்பது ஒரு அரிய சாதனையாகும்’’ என்று சாஸ்திரங்களில் கூறப் பட்டுள்ளது.அவர்களது உடன்பிறந்த குணங்களை புடம் போட்டு மேம்படுத்த முடியும் என்பதால், மனிதர்கள் உண்மையிலேயே, மிருகங்களிடையே, மிகவும் அதிருஷ்டசாலிகளும், தலைசிறந்த புனிதமானவர்களும் ஆவார்கள்.
புலன்களை அடக்கி ஆளாத ஒருவர் உண்மையிலேயே ஒரு மிருகமே.தார்மீகமான வாழ்வது மட்டுமே ,இம்மையிலும், மறுமையிலும் சந்தோஷத்தை அளிக்க வல்லதாகும்- பாபா