azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 23 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 23 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

God is present in everyone. He resides in every heart. So do not confine God to a temple, a mosque or a church. Where a human being is, there God is. God takes the form of a human (Daivam manusha rupena). As you forget and do not realise this important fact, you indulge in criticism of others. Whom are you criticising? Whom do you adore? Enquire for yourself. God is present in all. If you criticize others, you criticize God. Whoever you salute, it reaches God (Sarva jeeva namaskaram Keshavam prati gacchati) and whoever you insult or ridicule, it also reaches God! (Sarva jeeva tiraskaram Keshavam prati gacchati). Right from this moment, embark on a new life, giving up bad thoughts and evil qualities. Purify your heart. Love all, have faith that God is present in all. Fill your heart with pure love. Let your thoughts, words and deeds be sacred. Only then will your life be blissful. (Divine Discourse, Apr 13, 2002)
GOD IS EMBODIMENT OF PURE LOVE. CULTIVATE AND SHARE SELFLESS LOVE WITH EVERYONE.
THIS IS WHAT GOD EXPECTS FROM YOU. - BABA
இறைவன் அனைவருள்ளும் உறைகிறான்.அவன் ஒவ்வொரு இதயத்திலும் வசிக்கிறான்.எனவே, இறைவனை , ஒரு கோவில், ஒரு மசூதி அல்லது ஒரு சர்ச்சிற்குள் அடைத்து விடாதீர்கள். ஒரு மனிதன் எங்கு இருக்கிறானோ , அங்கு இறைவன் இருக்கிறான். இறைவன் ஒரு மனித உருவம் எடுத்துக் கொள்கிறான் (தெய்வம் மனுஷ ரூபேனா). இதை நீங்கள் மறந்து இந்த முக்கியமான உண்மையை உணராததால் தான், நீங்கள் பிறரை தூற்றுவதில் ஈடுபடுகிறீர்கள். நீங்கள் யாரைத் தூற்றுகிறீர்கள்? நீங்கள் யாரைப் போற்றுகிறீர்கள்? இதை நீங்களே ஆராயுங்கள். இறைவன் அனைவருள்ளும் உறைகிறான். நீங்கள் பிறரைத் தூற்றினால், இறைவனையே தூற்றுகிறீர்கள். நீங்கள் யாரை வணங்கினாலும், அது இறைவனையே சென்றடைகிறது( ஸர்வ ஜீவ நமஸ்காரம் சேசவம் பிரதிகச்சதி); நீங்கள் யாரையாவது அவமதித்தாலோ அல்லது தூற்றினாலோ அதுவும் கூட இறைவனையே சென்றடைகிறது ( ஸர்வ ஜீவ திரஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி). இந்தத் தருணத்திலிருந்தே, தீய சிந்தனைகளையும், கொடிய குணங்களையும் விடுத்து, ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்குங்கள். உங்கள் இதயத்தைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள். அனைவரையும் நேசித்து, அனைவருள்ளும் இறைவன் இருக்கிறான் என்பதை நம்புங்கள். உங்கள் இதயத்தைப் பரிசுத்தமான ப்ரேமையால் நிரப்புங்கள். உங்களது சிந்தனைகள், சொற்கள் மற்றும் செயல்கள் புனிதமாக இருக்கட்டும். அதன் பிறகே, உங்கள் வாழ்க்கை ஆனந்தமயமாக இருக்கும்.
இறைவன் பரிசுத்தமான ப்ரமையே உருவானவன். அந்த தன்னலமற்ற ப்ரேமையை வளர்த்துக் கொண்டு, அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். இதைத்தான், இறைவன் உங்களிடம் எதிர்பார்க்கிறான்- பாபா