azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 22 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 22 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Teachers should reveal the direction and the goal. Students lay the road and journey into the future. The skill and strength, status and stature of mankind are shaped and furthered in proportion to the quality and character of its teachers. Character is the hallmark of humanity. Teachers must dedicate their learning and wisdom to the great task of uplifting pupils to higher levels of knowledge and action. The virtues they help inculcate in their pupils are essential for the uplift of society. Every student must endeavour to unfold the divine present within and equip oneself for serving society with skill and knowledge. When virtues are rooted in the heart, every being shines in full glory. A life without good character is a shrine without light, a coin that is counterfeit, and a kite with a broken string. (Ch 18, Vidya Vahini)
THE FIRST TASK OF ALL TEACHERS IS TO CULTIVATE
VIRTUE IN THE HEARTS OF THEIR STUDENTS. - BABA
ஆசிரியர்கள், செல்ல வேண்டிய திசையையும், குறிக்கோளையும் விளக்கிக் காட்ட வேண்டும். மாணவர்கள் பாதையை அமைத்து, எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்கிறார்கள். மனித குலத்தின் திறமை மற்றும் வலிமை, அந்தஸ்து மற்றும் தரம், அதன் ஆசிரியர்களின் குணம் மற்றும் குணசீலத்திற்கு ஏற்றவாறே உருவாக்கப் பட்டு, மேம்படுத்தப் படுகிறது. நற்குணசீலமே, மனிதகுலத்தின் தரச்சின்னமாகும். ஆசிரியர்கள் தங்களது கல்வி மற்றும் ஞானத்தை, மாணவர்களை, அவர்களின் அறிவு மற்றும் செயல் திறனின் உயர்நிலைகளின் மேம்பாட்டிற்கு எடுத்துச் செல்லும் தலைசிறந்த பணிக்கு அற்பணிக்க வேண்டும். தங்களது மாணவர்களில், அவர்கள் உட்புகுத்த உதவும் நற்குண சீலங்கள், சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு அத்தியாவசியமானவை. ஒவ்வொரு மாணவனும், தன்னுள் உறையும் தெய்வீகத்தை மலரச் செய்து, சமுதாயத்திற்கு திறமை மற்றும் அறிவுடன் சேவை ஆற்றுவதற்கு தங்களைத் தயாராக்கிக் கொள்ள வேண்டும். எப்போது நற்குணசீலங்கள் இதயத்தில் வேறூன்றி விடுகின்றனவோ, அப்போது ஒவ்வொருவரும் முழு மாட்சிமையுடன் பிரகாசிப்பார்கள். நற்குண சீலமற்ற ஒரு வாழ்க்கை, விளக்கற்ற ஒரு கோவில், ஒரு கள்ள நாணயம் மற்றும் கயிறு அறுந்த ஒரு பட்டம் போன்றதாகும்.
அனைத்து ஆசிரியர்களின் முன் முதல் கடமை, அவர்களது மாணவர்களது இதயங்களில் நல்லொழுக்கத்தை வளர்ப்பதே ஆகும் - பாபா