azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 19 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 19 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Stop the habit of worrying. Doubts are the cause of your worry. You face more difficulties because of your habit of worrying. Perform your duties sincerely without worrying for anything. When you lead a truthful life, you will not have to run after anyone or beg for favours. Once you cultivate true love for God, you will have everything in life. Experience the bliss that is within your heart without making a show of it to others. On the one side is the world and on the other, God. You cannot have both simultaneously. It is like riding on two horses which is sure to prove dangerous. Focus your mind only on God and have total faith in Him. Always think of God, both in pleasure and pain. Desire only for God. Do not worry too much about your difficulties. All difficulties are like passing clouds. When you cultivate love for God, all your difficulties will vanish in a trice. (Divine Discourse, Apr 14, 2006)
NEVER WORRY. PRACTICE THE NOBLE QUALITIES OF
PURITY, PATIENCE AND PERSEVERANCE. - BABA
கவலைப்படும் பழக்கத்தை நிறுத்துங்கள்.உங்களது கவலைக்கு சந்தேகங்களே காரணம். உங்களது கவலைப் படும் பழக்கத்தால் நீங்கள் அதிகமான கஷ்டங்களை எதிர் கொள்ள நேரிடுகிறது. எதற்காகவும் கவலைப் படாமல், உங்களது கடமைகளை சிரத்தையுடன் ஆற்றுங்கள். நீங்கள் ஒரு உண்மையான வாழ்க்கை நடத்தினால், நீங்கள் எவர் பின்னாலும் ஓடவோ அல்லது சலுகைகளுக்காகக் கெஞ்சவோ வேண்டாம். ஒருமுறை நீங்கள் இறைவன் மீது உண்மையான ப்ரேமையை வளர்த்துக் கொண்டு விட்டால், நீங்கள் வாழ்வில் அனைத்தையும் அடைந்து விடுவீர்கள். ஒரு பக்கம் உலகம், மறுபக்கம் இறைவன். நீங்கள் இரண்டையும் ஒரே நேரத்தில் பெற்றிருக்க முடியாது. அது இரண்டு குதிரைகளின் மீது சவாரி செய்வது போல கண்டிப்பாக அபாயகரமானது. உங்கள் மனதை இறைவன் மீது மட்டுமே குவித்து அவன் மீது முழு நம்பிக்கை வையுங்கள். சுகம், துக்கம் இரண்டிலும், அவனை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இறைவனுக்காக மட்டுமே ஆசைப் படுங்கள். உங்களது கஷ்டங்களைப் பற்றி அதிகமாகக் கவலைப் படாதீர்கள். அனைத்து கஷ்டங்களும், கலையும் மேகங்களைப் போன்றவையே. நீங்கள் இறைவன் பால் ப்ரேமையை வளர்த்துக் கொண்டு விட்டால, உங்களது அனைத்து இடர்களும், ஒரு நொடியில் மறைந்து விடும்.
ஒரு போதும் கவலைப் படாதீர்கள். சீரிய குணங்களான தூய்மை, பொறுமை மற்றும் விடாமுயற்சியைக் கடைப்பிடியுங்கள் - பாபா