azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 14 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 14 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

To embark on a new life, you need not wait for the arrival of a new year. Treat every second as new. Sanctify every moment of your life. The observance of the beginning of a New Year is based on the statements of the almanac maker. Calendar is a man-made device. The sun and the moon remain unchanged. The omnipotent and omnipresent Divine transcends such ideas. Earnestly aspire to realise the unity of Sat (the Divine) and Chit (the individual Consciousness). When this union is achieved, you will experience Ananda (Spiritual Bliss). This is the primary task before everyone. All of you should aspire to achieve that essential purpose of your human birth. You are bound by your own actions in this world. Regard the entire cosmos as a great mansion of the Supreme Lord! Let your actions be good. Be pure in your speech. Develop a sacred vision and purify your hearts. (Divine Discourse, Jan 1, 1992)
TO THE INDIVIDUAL WHO HAS TRULY SURRENDERED TO THE LORD,
EVERYTHING THAT THEY EXPERIENCE (GOOD OR BAD) IS A GIFT FROM GOD. - BABA
ஒரு புது வாழ்க்கையைத் தொடங்குவதற்கு நீங்கள், ஒரு புது வருடம் வர வேண்டும் எனக் காத்திருக்கத் தேவையில்லை. ஒவ்வொரு நொடியையும் புதியதாகக் கருதுங்கள். உங்களது வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் புனிதமாக்கிக் கொள்ளுங்கள். ஒரு புது வருடத் தொடக்கத்தை அனுசரிப்பது என்பது பஞ்சாங்கக் காரர்களின் கூற்றைப் பொறுத்தது. நாட்காட்டி என்பது மனிதன் உருவாக்கிய ஒரு கருவியே. சூரியனும், சந்திரனும் மாறாமல் தான் இருக்கின்றன. சர்வ வல்லமை பொருந்திய, அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் தெய்வீகம் இப்படிப் பட்ட கருத்துக்களுக்கு அப்பாற்பட்டதாகும். சத் ( பரமாத்மா ) மற்றும் சித்தின் ( ஜீவாத்மா ) ஒருமையை உணருவதற்கு உளமாற விரும்புங்கள். இந்த இரண்டறக் கலத்தலை அடைந்து விட்டால், நீங்கள் ஆனந்தத்தை அனுபவிப்பீர்கள். இதுவே ஒவ்வொருவரின் முன் உள்ள தலையாய பணியாகும். நீங்கள் அனைவரும், உங்களது மனிதப் பிறவியின் இன்றியமையாத அந்தக் குறிக்கோளை அடைவதற்குப் பாடுபட வேண்டும். நீங்கள் இந்த உலகில் ஆற்றும் உங்களது செயல்களால் கட்டுண்டவர்கள். இந்த பிரபஞ்சம் அனைத்தையும் பரமாத்மாவின் ஒரு தலை சிறந்த மாளிகையாகக் கருதுங்கள்! உங்களது செயல்கள் நல்லவையாக இருக்கட்டும். உங்களது பேச்சில் பரிசுத்தமாக இருங்கள். ஒரு புனிதமான கண்ணோட்டத்தை வளர்த்துக் கொண்டு, உங்களது இதயங்களைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள்.
இறைவனிடம் உண்மையாக சரணாகதி அடைந்த ஒரு மனிதருக்கு, வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவமும் (நல்லதோ அல்லது கெட்டதோ), இறைவனிடமிருந்து வந்த ஒரு பரிசே ஆகும். - பாபா