azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Wednesday, 08 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Wednesday, 08 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Arjuna was the brother-in-law of Krishna; they were great friends too. Krishna undoubtedly had the power to transform in a trice the way-ward mind of his kinsman into an illumined instrument for resolute action. But Krishna did not use any of His powers! He only prescribed the medicine and the regimen; Arjuna had to swallow the drug and follow the regimen himself, in order to be saved. Krishna said, "You are My friend, you are My kinsman, you are now so near to Me that I am now your charioteer, you are also in great distress; I agree that the delusion which has overpowered you must be removed quickly; but your ignorance (ajnana) must fall off through your own efforts, not through some miracle of My design." Truth that is won by one's own struggle with untruth will be lasting treasure; the struggle will strengthen you to treasure the real treasure! - Divine Discourse, Mar 02, 1965
WHATEVER BE THE TROUBLE, HOWEVER GREAT BE THE SORROW,
PERSIST AND WIN OVER IT BY RECALLING THE LORD’S NAME. - BABA
அர்ஜூனன், பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் மைத்துனர் ஆவார்; அவர்கள் இருவரும் மிகச் சிறந்த நண்பர்களும் கூட. சந்தேகத்திற்கு இடமின்றி, பகவான் ஸ்ரீகிருஷ்ணர், கணப் பொழுதில், அவரது உறவினரின் அலை பாயும் மனதை, உறுதியான செயல் புரிவதற்கான ஒரு தெள்ளத் தெளிவான கருவியாக மாற்றும் சக்தி படைத்தவரே. ஆனால் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவரது எந்த சக்தியையும் அவ்வாறு பயன்படுத்தவில்லை! அவர் மருந்தையும், அதற்கான பத்தியத்தையும் அறிவுறுத்த மட்டுமே செய்தார்; தன்னைக் காத்துக் கொள்ள, அர்ஜூனன் தானே அந்த மருந்தை விழுங்கி, அதற்கான பத்தியத்தைக் கடைப்பிடிக்க வேண்டி வந்தது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ‘’ நீ எனது நண்பன், நீ எனது உறவினன், நான் உனக்கு சாரதியாக இருக்கும் அளவிற்கு, இப்போது நீ எனக்கு நெருக்கமானவன்; நீ இப்போது மிகுந்த துக்கத்தில் ஆழ்ந்துள்ளாய்; உன்னை சூழ்ந்துள்ள மாயையிலிருந்து நீ விரைவாக நீக்கப் பட வேண்டும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்; ஆனால், உனது அறியாமை, உன்னுடைய சொந்த முயற்சியினால் விலக வேண்டுமே அன்றி, என்னால் ஆற்றப்படும் எந்த அற்புதத்தினாலும் அல்ல.’’ என்று கூறினார். அசத்தியத்துடன் ஒருவர் தனது சொந்தப் போராட்டத்தால் பெறப் படும் சத்தியமே நிரந்தரமான பொக்கிஷமாக இருக்கும்; இந்தப் போராட்டமே, உங்களை உண்மையான பொக்கிஷத்தைப் போற்றிப் பாதுகாக்க வைக்கும் அளவிற்கு வலுவானவர்களாக ஆக்கும் !
துன்பம் எதுவானாலும், துயரம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், இடையறாத இறைநாமஸ்மரணையின் மூலம் வெற்றி பெறுங்கள்- பாபா