azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Friday, 03 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Friday, 03 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

There was great unity and understanding not only among the four brothers - Rama, Lakshmana, Bharatha and Shatrughna, but also among their consorts. Every character in the Ramayana is an ideal for every family. Is there a family today where sons and daughters-in-law live in amity? Is there a family where brothers live in harmony without indulging in disputes? Nowhere do we find such an ideal family today. You may have desires, but they should be under limit. They should be based on truth and righteousness. Do not eat whatever you get. Do not speak whatever comes to your mind. You should speak only after proper enquiry. These are some of the lessons that the Ramayana teaches to mankind. Remember, the story of Rama is not an ancient one. It is eternal and ever new. It is full of auspiciousness. Give up all hatred and all differences! May you fill your heart with the sacred ideals of the Ramayana! May you live in peace and harmony! -Divine Discourse, Apr 11, 2003
WHEN YOU CONTEMPLATE ON RAMA INCESSANTLY, YOU DERIVE GREAT JOY AND DELIGHT. - BABA
ஸ்ரீராமர், லக்ஷ்மணர், பரதர், சத்ருக்னர் என்ற நான்கு சகோதரர்களுக்கு இடையே மற்றும் இன்றி, அவர்களது மனைவியர்களுக்கு இடையிலும் ஒரு சிறந்த ஒற்றுமை மற்றும் புரிதலும் இருந்தது. ஸ்ரீமத் ராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரமும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு இலட்சியமாகும். இன்று, மகன்களும், மருமகப் பெண்களும் ஒற்றுமையாக வாழும் ஒரு குடும்பம் எங்காவது இருக்கிறதா? சகோதரர்கள், சச்சரவில் ஈடுபடாமல் இசைவாக வாழுகின்ற ஒரு குடும்பம் எங்காவது இருக்கிறதா? இன்று இப்படிப் பட்ட இலட்சிய குடும்பத்தை எங்கேயும் காண முடிவதில்லை. உங்களுக்கு ஆசைகள் இருக்கலாம், ஆனால் அவை ஒரு வரம்பிற்குள் இருக்க வேண்டும். அவை சத்யம் மற்றும் தர்மத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். உங்களுக்குக் கிடைத்ததை எல்லாம் உண்ணாதீர்கள். உங்கள் மனம் போனபடி எல்லாம் பேசாதீர்கள். தகுந்த ஆய்விற்குப் பிறகே பேச வேண்டும். இவையே, ஸ்ரீமத் ராமாயணம் உலகிற்குப் புகட்டும் சில பாடங்களாகும். ஸ்ரீராமரின் கதை புராதனமான ஒன்றல்ல. அது நிரந்தரமானதும், நித்ய நூதனமானதும் ஆகும். அது மங்களகரமானதும் ஆகும். உங்களது அனைத்து த்வேஷங்கள் மற்றும் கருத்து வேற்றுமைகளை விட்டு விடுங்கள்! உங்களது இதயங்கள் ஸ்ரீமத் ராமாயணத்தின் புனிதமான இலட்சியங்களால் நிரம்பி இருக்கட்டும்! நீங்கள் சாந்தி மற்றும் இசைவுடன் வாழ்வீர்களாகுக!
நீங்கள் ஸ்ரீராமரை இடையறாது தியானிக்கும் போது, அளவற்ற மகிழ்ச்சி மற்றும் களிப்பைப் பெறுகிறீர்கள்- பாபா