azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Thursday, 02 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Thursday, 02 Apr 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Rama is the Indweller in every body. He is the Atma-Rama, the Source of Bliss in every individual. He is the very embodiment of dharma, of all the codes of morality that hold mankind together in love and unity. The Ramayana teaches two lessons: the value of detachment and the need to become aware of the Divine in every being. Faith in God and detachment from objective pursuits are the keys for human liberation. Give up sense objects, and you gain Rama. Sita gave up the luxuries of Ayodhya, so she could be with Rama, in the period of “exile”. When she cast longing eyes on the golden deer and craved for it, she lost the presence of Rama. Renunciation leads to joy; attachment brings about grief. Be in the world, but not of it. Make your heart pure and strong, contemplating the grandeur of the Ramayana. Be established in the faith that Rama is the Reality of your existence. (Rama Katha Rasavahini, Ch 1, “The Inner Meaning”)
RENUNCIATION LEADS TO JOY; ATTACHMENT BRINGS ABOUT GRIEF. BE IN THE WORLD, BUT NOT OF IT- BABA
ஸ்ரீராமர் ஒவ்வொரு உடலினுள்ளும் உறைபவர். ஒவ்வொருவருள்ளும் இருக்கும் ஆனந்தத்தின் ஆதாரமான அவரே ஆத்மா ராமர்.அவர் தர்மம் மற்றும் மனித குலத்தை அன்பு மற்றும் ஒற்றுமையினால் இணைத்து வைக்கும் அனைத்து நல்லொழுக்கக் கோட்பாடுகளின் ஸ்வரூபம். ஸ்ரீராமரின் கதையான ‘’ ஸ்ரீமத் ராமாயணம்’‘ நமக்கு இரு பாடங்களைப் புகட்டுகிறது- பற்றின்மையின் மதிப்பு மற்றும் ஒவ்வொரு ஜீவராசியினுள்ளும் உறையும் தெய்வீகத்தைப் பற்றிய விழுப்புணர்வைப் பெறுவதன் அவசியம். இறை நம்பிக்கை மற்றும் உலகியலான பொருட்களைத் தேடுவதிலிருந்து பற்றற்று இருத்தல் ஆகியவையே மனிதருக்கு மோக்ஷத்திற்கான சாவிகள். காமத்தை விட்டு விட்டால், ராமன் உங்களுக்குக் கிட்டிடுவான்.வன வாசத்தின் போது, சீதா மாதா, அயோத்தியின் அனைத்து சௌகரியங்களையும், ஸ்ரீராமருடன் இருப்பதற்காக விட்டு விட்டார்.பொன்மானின் மீது தனது ஆசை நிறைந்த பார்வையை வைத்து அதற்காக ஏங்கியதால், ஸ்ரீராமரின் அருகாமையை இழந்தார். பற்றின்மை ஆனந்தத்தை அளிக்கும்; பாசம் சோகத்தில் முடியும். உலகத்தில் இருங்கள், ஆனால் அதனுடையதாக இருக்காதீர்கள். ஸ்ரீமத் ராமாயணத்தின் மகத்துவத்தைத் தியானிப்பதின் மூலம் உங்கள் இதயத்தை தூய்மையாகவும், வலுவானதாகவும் ஆக்கிக் கொள்ளுங்கள். ஸ்ரீராமரே, உங்களது வாழ்க்கையின் உண்மை நிலை என்ற நம்பிக்கையில் நிலைத்திருங்கள்.
பற்றின்மை ஆனந்தத்தை அளிக்கும்; பாசம் சோகத்தில் முடியும். உலகத்தில் இருங்கள், ஆனால் அதனுடையதாக இருக்காதீர்கள்-பாபா