azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 22 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 22 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Only trees growing on fertile soil can yield good fruits. Those growing on saline soils will be poor. So also, only in unsullied hearts can holy feelings, power, and gifts shine in splendour. The present-day contemplators (Brahma-nishtas) practise the same meditation and the same Om (pranava) as their namesakes in the past. The difference between them arises in the decline in self-control, as far as the field of spiritual discipline is concerned. When the number of great souls (maha-purushas) who engage themselves in unflinching meditation of God in solitary places declined, much suffering descended on the world. Those who exist today are damaging their contemplation on God by arranging for the accumulation of obstacles for carrying out their spiritual practices, by getting enslaved to mean praise and fame, by becoming entangled in delusion, and by restlessly endeavouring to earn glory and to expand the institutions they have founded. (Prema Vahini, Ch 67)
WHEN THE HEART IS PURE, THE LIGHT OF WISDOM SHINES. - BABA
வளமான மண்ணில் வளரும் மரங்களே நல்ல பழங்களைத் தர முடியும். உப்பு மண்ணில் வளர்பவை வளமற்று இருக்கும்.அதைப் போலவே,களங்கமற்ற இதயங்களில் மட்டுமே, புனித உணர்வுகள்,வலிமை மற்றும் திறன்கள் ஒளிர் விட்டுத் திகழும்.இந்நாளைய இறைத் தியானம் செய்பவர்களும் (ப்ரம்ம நிஷ்ட) , அவர்களைப் போன்ற பண்டைய காலத்தவர் கடைப் பிடித்த அதே தியானம் மற்றும் ஓம்காரத்தைத் ( ப்ரணவ) தான் கடைப் பிடிக்கின்றனர். ஆன்மிகக் கட்டுப்பாட்டைப் பொறுத்த அளவில், அவர்கள் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம், புலனடக்கத்தின் வீழ்ச்சியில் தான் இருக்கிறது. தங்கு தடையற்ற இறைத் தியானத்தில் தங்களையே தனிமையில் ஈடுபடுத்திக் கொண்டிருந்த அந்த மாமனிதர்களின் ( மஹா- புருஷாஸ்) எண்ணிக்கை குறையக் குறைய, அதிகமான துன்பம் உலகிற்கு உண்டாகியது. தங்களது ஆன்மிக சாதனைகளுக்கான தடைகளைக் குவித்துக் கொண்டும், அற்பமான புகழ்ச்சி மற்றும் புகழுக்கு அடிமையாகியும், மாயையில் சிக்கிக் கொண்டும், ஓய்வின்றி மகிமையை ஈட்டுவது மற்றும் தாங்கள் நிலைநாட்டிய நிறுவனங்களை வளர்ப்பது ஆகியவற்றில் கடும் முயற்சி மேற்கொண்டும், இன்று இருப்பவர்கள் தங்களது இறைத் தியானத்தை பாழடித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இதயம் பரிசுத்தமாக இருக்கும்போது,
ஞான ஜோதி ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது. - பாபா