azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 17 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 17 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Change the angle of your vision. When you practise seeing the world from the point of view of the omnipresence of the Divine, you will get transformed. You will experience the power of the Divine in everything in creation. You cannot hide anything from God. Many imagine that Swami does not see what they are doing. They do not realise that Swami has myriad eyes. Even your eyes are divine. But you are not aware of your true nature. When you have faith in yourself, you will have faith in God. Realise that there is nothing beyond the power of God. Love God with that supreme faith. Then you will be drawn towards God. It needs purity. A magnet cannot attract a piece of iron covered with rust. Similarly God will not draw to Himself an impure person. Hence, change your feelings and thoughts and develop the conviction that God is everything. God will not give you up when you have this conviction. - Divine Discourse Feb 27, 1995
THE BEST SPIRITUAL DISCIPLINE IS TO STRENGTHEN YOUR INWARD VISION. - BABA
உங்களது பார்வையின் கோணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள தெய்வீகத்தின் நோக்கிலிருந்து, இந்த உலகைப் பார்க்க நீங்கள் பயிலும்போது, நீங்கள் மனமாற்றம் அடைவீர்கள். படைப்பின் அனைத்திலும், தெய்வீகத்தின் சக்தியை நீங்கள் உணர்வீர்கள். நீங்கள் எதையும் இறைவனிடமிருந்து மறைக்க முடியாது.பலர், தாங்கள் செய்து கொண்டிருப்பதை, சுவாமி பார்ப்பதில்லை என்று எண்ணுகிறார்கள். சுவாமிக்கு எண்ணற்ற கண்கள் உள்ளன என்பதை அவர்கள் உணருவதில்லை. உங்களது கண்களும் கூட தெய்வீகமானவையே. ஆனால், நீங்கள் உங்களது உண்மை இயல்பை அறிவதில்லை.உங்களுக்கு உங்கள் மீதே நம்பிக்கை இருக்குமானால், உங்களுக்கு இறைவனிடம் நம்பிக்கை இருக்கும். இறைவனது சக்திக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை என்பதை உணருங்கள். அந்த தலைசிறந்த நம்பிக்கையுடன் இறைவனை நேசியுங்கள். பின்னர், நீங்கள் இறைவன் பால் ஈர்க்கப் படுவீர்கள்.இதற்கு பரிசுத்தம் தேவை. துருப்பிடித்துள்ள ஒரு இரும்புத் துண்டை, ஒரு காந்தம் ஈர்க்க முடியாது. அதைப் போலவே, இறைவன், பரிசுத்தமற்ற ஒருவரை தன் பால் ஈர்ப்பதில்லை. எனவே, உங்களது, உணர்வுகளையும், சிந்தனைகளையும், மாற்றிக் கொண்டு, இறைவனே அனைத்தும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கும் போது, இறைவன் உங்களைக் கை விடுவதில்லை.
தலைசிறந்த ஆன்மீக சாதனை உங்களது
அக திருஷ்ட்டியை வலுப்படுத்துவதே - பாபா