azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Sunday, 15 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Sunday, 15 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Every person is liable to commit mistakes without being aware of it. However bright the fire or light, some smoke will emanate from it. So also, whatever good deed a person might do, mixed with it will be a minute trace of evil. But efforts should be made to ensure that the evil is minimised, that the good is more and the bad is less. Naturally, in the present atmosphere, you may not succeed in the very first attempt. You must carefully think over the consequences of whatever you do, talk, or execute. It is not the nature of a spiritual aspirant to search for faults in others and hide their own. If your faults are pointed out to you by someone, don’t argue and try to prove that you were right, and don’t bear a grudge against them for it. Reason out within yourself how it is a fault and set right your own behaviour. Rationalising it for your own satisfaction or wreaking vengeance on the person who pointed it out — these are certainly not the traits of a spiritual aspirant or devotee. - Prema Vahini, Ch. 63
WHEN THE SAMSKARAS (SPIRITUAL DISCIPLINES) LEAD TO THE REFINEMENT OF THE SPIRIT,
THE EXPERIENCE OF ONENESS WITH THE DIVINE NATURALLY COMES. - BABA
ஒவ்வொரு மனிதனும் தன்னை அறியாமலேயே தவறுகள் இழைக்கக் கூடும். நெருப்பு எவ்வளவு பிரகாசமாக இருந்தாலும், கொஞ்சம் புகை அதிலிருந்து வரத்தான் செய்யும்.அதைப் போலவே, எப்படிப் பட்ட நல்ல செயலை ஒருவர் ஆற்றினாலும்,அதில் ஒரு இம்மி அளவாவது தீமை கலந்து இருக்கத் தான் செய்யும். ஆனால், நல்லவை அதிகமாகவும், தீயவை குறைவாகவும் இருக்கும் பொருட்டு, தீமை மிகக் குறைவாக இருக்குமாறு செய்வதற்கு முயற்சிகள் செய்யப் பட வேண்டும். தற்காலச் சூழ்நிலையில், இயல்பாகவே, நீங்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெறாமல் போகக் கூடும். நீங்கள் செய்வது, பேசுவது அல்லது ஆற்றுவதன் விளைவுகளைப் பற்றி கவனமாகச் சிந்திக்க வேண்டும். தங்களின் குறைகளை மறைத்துக் கொண்டு, பிறரிடம் குறைகளைத் தேடுவது ஆன்மிக சாதகரின் இயல்பாகாது. உங்களது குறைகளை யாராவது உங்களுக்குச் சுட்டிக் காட்டினால், அவர்களிடம் வாதாடி, நீங்களே சரி என நிரூபிக்க முயலாமலும், அதற்காக அவர்களின் மீது ஒரு காழ்ப்புணர்ச்சி வைத்துக் கொள்ளாமலும் இருங்கள். அது ஒரு குறை என்பதை நீங்களே உங்களுக்குள் ஆராய்ந்து உங்களது சொந்த நடத்தையை சரி செய்து கொள்ளுங்கள். உங்களது திருப்திக்காக அதை நியாயப்படுத்துவதும், அதைச் சுட்டிக் காட்டியவரை பழி வாங்குவதும், இவை ஒரு ஆன்மிக சாதகர் அல்லது பக்தரின் இயல்புகள் அல்ல.
ஸம்ஸ்காரங்கள் (ஆன்மிக சாதனைகள்), ஆத்மாவைப் பண்படுத்துவதற்கு இட்டுச் செல்லும் போது,தெய்வீகத்துடனான ஒருமை அனுபவம் இயல்பாகவே வந்து விடுகிறது- பாபா