azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Saturday, 14 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Saturday, 14 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Of the various types of devotion, remembrance of the name (namasmarana) is best. In the Kali yuga, the name is the path for saving oneself. Jayadeva, Gouranga, Thyagaraja, Tukaram, Kabir, Ramdas — all these great devotees attained the Lord through just this one practice. Why speak of a thousand things? Even Prahlada and Dhruva were able to enjoy the sight, touch, and conversation (darshan, sparshan, and sambhashana) of the Lord only through repetition of the name, right? There can be no better path to liberation (mukti) than considering the name of the Lord as the very breath of life and, with complete faith in good deeds and thoughts, developing the spirit of service and equal love for all. Instead of this, if one sits in some solitary nook holding the breath, how can one master the innate qualities? How is one to know that one has mastered them? - Prema Vahini, Ch 62
TO RESURRECT LOVE AND COMPASSION, YOU MUST KILL JEALOUSY AND SELFISHNESS,
AND PURIFY YOUR HEARTS. - BABA
பல விதமான பக்தியில் இறை நாமஸ்மரணையே தலைசிறந்ததாகும். கலியுகத்தில், இறைநாமமே ஒருவர் தன்னைக் காத்துக் கொள்வதற்கான பாதையாகும். ஜயதேவர், கௌரங்கா, தியாகராஜர், துக்காராம், கபீர், ராமதாஸர்- இந்த அனைத்து தலைசிறந்த பக்தர்களும், வெறும் இந்த ஒரு முறையின் மூலமே இறைவனை அடைந்துள்ளார்கள். ஒரு ஆயிரம் விஷயங்களைப் பற்றி எதற்குப் பேச வேண்டும்? பிரஹலாதன் மற்றும் துருவன் இறைவனைக் காணுதல், தொடுதல் மற்றும் உரையாடுதலை (தர்ஷன், ஸ்பர்ஷன், சம்பாஷன்) இறை நாமஸ்மரணையின் மூலமே அனுபவித்து ஆனந்தம் அடைந்துள்ளார்கள். சரிதானே? நற்கருமங்கள் மற்றும் சிந்தனைகளில் முழு நம்பிக்கையுடன், சேவை உணர்வு மற்றும் அனைவர் மீதும் சமமான ப்ரேமையை வளர்த்துக் கொண்டு இறைவனது திருநாமத்தை உயிர் மூச்சாகவே கருதுவதை விட முக்திக்கான சிறந்த பாதை வேறு எதுவும் இல்லை. இதற்குப் பதிலாக, ஒருவர் தனியாக ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு மூச்சைப் பிடித்துக் கொண்டு இருந்தால், ஒருவர் எவ்வாறு உள்ளார்ந்த குணங்களின் மீது ஆளுமை பெற முடியும்? ஒருவர் இவற்றின் மீது ஆளுமை பெற்று விட்டார் என்று எப்படித் தெரிந்து கொள்வது?
ப்ரேமையையும், பரிவையும் புனருத்தாரணம் செய்வதற்கு, நீங்கள் பொறாமையையும், சுயநலத்தையும் அழித்து, உங்கள் இதயங்களை பரிசுத்தமாக்கிக் கொள்ள வேண்டும் - பாபா