azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Monday, 09 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Monday, 09 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Lately, there is a huge progress everywhere in the material field, there are many schemes and plans to increase prosperity and comforts. Schools, hospitals, offices and factories are multiplying, but there is no peace in the hearts of people. Why? Because there is no corresponding increase in moral conduct! ‘Man’ means, ‘One who has control over the mind (manas).’ To remove dirt from a white cloth, what do you do? You soak it in warm water, rub soap flakes, and beat it on a hard surface. You do not make it white; it is white already! You only remove the non-whiteness during washing, isn’t it? So also, never forget that your individual soul is pure! When it is soiled, cleanse it. To keep it pure, soak it in good conduct and noble character, soap it with meditation on God, warm it in discriminatory wisdom helped by reason, and beat it on the slab of renunciation. (Divine Discourse 18 July 1961)
A STICK WILL HELP ONE WALK UP AN INCLINE, BUT OF WHAT USE IS IT TO A PERSON WHOSE LEGS ARE AMPUTATED? MATERIAL PROSPERITY IS THE STICK, AND VIRTUE IS THE STRENGTH OF THE FEET. - BABA
சமீப காலத்தில்,உலகியல் துறையில் ஒரு மிகப் பெரிய முன்னேற்றம் எங்கும் காணப்படுகிறது; செழிப்பு மற்றும் வசதிகளை அதிகரிப்பதற்கான பல திட்டங்கள் உள்ளன. பள்ளிகள், மருத்துவ மனைகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் பெருகிக் கொண்டே போகின்றன; ஆனால் மக்களின் மனங்களில் சாந்தியே இல்லை. ஏன்? ஏனெனில்,நல்லொழுக்க நடத்தையில் அதே அளவு முன்னேற்றம் இல்லை! ‘’ மனிதன் ‘’ என்றால், ‘’ மனதின்( மனஸ்) மீது கட்டுப்பாடு கொண்டவன்’’ என்று பொருள். ஒரு வெள்ளைத் துணியில் அழுக்கை எடுக்க வேண்டும் என்றால், நீங்கள் என்ன செய்கிறீர்கள்? அதை சூடான நீரில் நனைத்து, சோப்புத் துகள்களைத் தடவி, அதை ஒரு கடினமான பரப்பில் அடித்துத் துவைக்கிறீர்கள். நீங்கள் அதை வெள்ளையாக்குவதில்லை; அது ஏற்கனவே வெண்மையாகத்தான் இருக்கிறது! தோய்க்கும் போது, அதன் வெண்மையற்றவற்றை மட்டுமே நீங்கள் நீக்குகிறீர்கள், இல்லையா? அதைப் போலவே, உங்களது ஆத்மா பரிசுத்தமானது என்பதை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்! அது அழுக்காகி விட்டால், அதைத் தூய்மைப் படுத்துங்கள். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள, அதை நன்னடத்தை மற்றும் சீரிய குணநலன் எனும் நீரில் நனைத்து, இறைச் சிந்தனை எனும் சோப்பைத் தேய்த்து, அறிவின் உதவி கொண்ட பகுத்தறியும் ஞானத்தால் சூடேற்றி, பற்றின்மை என்ற கல்லில் அடித்துத் துவையுங்கள்.
ஒரு கைத்தடி ஒருவருக்கு, ஏற்றமாக இருக்கும் இடத்தில் ஏற உதவலாம்; ஆனால்,கால்கள் வெட்டப் பட்ட ஒருவருக்கு அதனால் என்ன பயன் ? பொருட்களாலான செழிப்பு ஒரு கழி போன்றது; நல்லொழுக்க சீலமே கால்களின் வலிமை போன்றதாகும்- பாபா