azhagi.com/baba - 100s of 'Thought for the Day' nectars of beloved Bhagawan Sri Sathya Sai Baba - translated from English to Tamil by an ardent devotee - typed using Azhagi
Date: Tuesday, 03 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')
Date: Tuesday, 03 Mar 2020 (As it appears in 'Prasanthi Nilayam')

Instead of getting enslaved to the evanescent and the false and wasting precious time in their pursuit, dedicate every minute to discovering truth and contemplating the everlasting, ever-true Lord. One shouldn’t fall victim to the poisonous attractions of worldly luxuries or the wiles of seductive beauty. One day, all these fascinating scenes will vanish as a story unfolded in dream! How can we say that the objective world, which undergoes modifications every minute, waning and waxing with the waywardness of appearing and disappearing, is eternal truth? In this false world, there can be no true living (satya-achara). There can be only false living (mithya-achara). True living consists in the realisation of the Lord. This must be borne in mind by everyone every moment of their life. (Prema Vahini, Ch 58)
LIVE, AVOIDING EVIL DEEDS, HATEFUL AND HARMFUL THOUGHTS, AND
DON’T GET ATTACHED TO THE WORLD. - BABA
அநித்யமான மற்றும் பொய்யானவற்றிற்கு அடிமையாகி, பொன்னான நேரத்தை அவற்றைத் தேடுவதில் வீணடிக்காமல்,ஒவ்வொரு நிமிடத்தையும் சத்தியத்தைக் கண்டு பிடிப்பதற்கும், நிரந்தரமான, நித்ய சத்யமான இறைவனை தியானிப்பதற்கும், அர்ப்பணியுங்கள். உலக ஆடம்பரங்களின் விஷ ஈர்ப்புகளுக்கோ அல்லது கவர்ச்சியான அழகின் சூழ்ச்சிகளுக்கோ ஒருவர் பலியாகி விடக்கூடாது.ஒருநாள், கனவில் விவரிக்கப் படும் ஒரு கதையைப் போல, இந்த அனைத்து மனதை மயக்கும் காட்சிகளும் மறைந்து விடும் ! ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டு, தோன்றியும், மறைந்தும் என வளர்ந்தும், குறைந்தும் கொண்டு இருக்கும் பொருட்களாலான இந்த உலகை நித்ய சத்யம் என நாம் எவ்வாறு கூற முடியும்? இந்த பொய்மையான உலகில், உண்மையான வாழ்க்கை (சத்ய ஆசார) என்று எதுவுமே இல்லை. பொய்மையான வாழ்க்கை (மித்ய ஆசார) மட்டுமே இருக்க முடியும். உண்மையாக வாழ்வது என்பது இறைவனை உணருவதில் தான் இருக்கிறது. இதை ஒவ்வொருவரும், அவர்களது வாழும் ஒவ்வொரு தருணத்திலும், மனதில் கொண்டு இருக்க வேண்டும்.
தீய செயல்கள், வெறுப்பான, தீங்கு விளைவிக்கும் சிந்தனைகள் ஆகியவற்றைத் தவிர்த்து வாழுங்கள்; மேலும் உலகின் மீது பற்று வைக்காதீர்கள்- பாபா